இராமநாதபுரம் மாவட்டம் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பைச் சேர்ந்த 26 நபர்களுக்கு ரூ.13.85 இலட்சத்திற்கான சுழல் நிதி கடன் திட்ட உதவிகளை வழங்கி தனிநபர் பொருளாதார முன்னேற்றத்தில் மகளிர் குழு ஆர்வமுடன் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தகவல்
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையேற்று மகளிர் குழுக்களுக்கு சுழல் நிதி கடனுதவி வழங்கினார்,
உலக வங்கியின் நிதி உதவியுடன் ஊரக ஊராட்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் துவங்கப்பட்டு இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழு பயன்பெறும் வகையில் சுழல் நிதி கடன் உதவி வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் துவக்கி வைத்தார்கள், அதன் அடிப்படையில் மாவட்டம் தோறும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டம் ஊரகப் பகுதிகளில் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் தொழில் மேம்பாடு நிதி சேவைகளுக்கு வழிவகுத்தல் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகிய செயல்பாடுகளை நோக்கமாகக் கொண்டதாகும்.
இத்திட்டம் இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்புல்லாணி, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் மண்டபம் ஊராட்சி ஒன்றியங்களில் 143 ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தில் முக்கிய அம்சமாக நுண் தொழில் நிறுவன கடன் திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவி குழு உரிய தொழில் செய்யவும், செய்யும் தொழிலை விரிவுபடுத்தவும் மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பின் மூலம் தொழில் கடன் உதவி வழங்கப்படுகிறது. இத்தகைய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் பகுதியில் உள்ள மகளிர் குழுக்கள் அமைத்து தனிநபர் பொருளாதார முன்னேற்றம் பெற்று பயன்பெறும் வகையில் ஆர்வமுடன் செயல்பட வேண்டுமென பின்னர் 26 நபர்களுக்கு ரூ.13.85 இலட்சத்திற்கான சுழல் நிதி கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், வழங்கினார்.