Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில்

மதுரை கூடலழகர் பெருமாள் கோயில்

  • கூடலழகர் பெருமாள் கோயில், இந்தியாவில், தமிழ்நாட்டிலுள்ள மதுரையில் அமைந்துள்ளது.
  • இது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று.
  • இதற்கு ஆழ்வார் பாடல்கள் உள்ளன.
  • இக்கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் ‘கூடலழகர்’. மாடத்தில் பள்ளி கொண்டிருக்கும் கோலம் அந்தரவானத்து எம்பெருமான் என்னும் பெயருடையது.

கூடல் அழகர் கோயில் கோவில் அமைப்பு

  • கோயிலின் உட்புறத்திருந்து தெரியும் கோபுரத் தோற்றம் ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம்,
  • எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது .
  • இக்கோயில் அஷ்டாங்க விமானத்தின் கீழ்தளத்தில் கூடலழகர் அமர்ந்த கோலத்திலும், இரண்டாவது தளத்தில்
  • சூரிய நாராயணர் நின்ற கோலத்திலும் மூன்றாவது தளத்தில் பாற்கடல் நாதர் பள்ளிகொண்ட கோலத்திலும் காணப்படுகிறார்.
  • உற்சவர் வியூகசுந்தர்ராஜப் பெருமாள்.

சிறப்பு

  • மூன்று தளங்களும் 5 சிகரங்களும் கொண்ட அஷ்டாங்க விமானம்.இதன் நிழல் தரையில் விழுவதில்லை.
  • பாண்டியனின் ஐயம் தீர்த்து மதுரையில் பொற்கிழி அறுத்த பெரியாழ்வார்.
  • இக்கோயிலில் இருந்த அந்தர வானத்து எம்பெருமானின் கோலம் கண்டே திருப்பல்லாண்டு பாடினார்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments