மதுரை தமுக்கம் மைதானத்துக்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயர்! -அரசுக்கு மக்கள் கோரிக்கை
மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை சூட்டு
தமிழக முதல்வர் தலையிட்டு மதுரை தமுக்கம் கலையரங்கத்திற்கு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை சூட்டவேண்டும் என தமிழக முழுவதும் மக்கள் குரல் எழுப்பி வருகின்றனர்.
மதுரை மாநாட்டு மையம்
மதுரையில் பிரசித்திபெற்ற தமுக்கம் மைதானத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய அரங்கத்தைக் கட்டுவதற்காக ஏற்கனவே இருந்த பழைய கலையரங்கம் இடிக்கப்பட்டு புதிதாக அரங்கம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு ‘மதுரை மாநாட்டு மையம்’ என்று தமிழிலும் ‘ஆடிட்டோரியம்’ என்று ஆங்கிலத்திலும் எழுதப்பட்டுள்ளது.
பொருட்காட்சி, கண்காட்சி
மதுரை நகரில் வைகை நதியின் வடகரையில் தல்லாகுளத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது தமுக்கம் மைதானம். தமிழ்நாடு அரசு சித்திரைத் திருவிழா காலகட்டத்தில் சித்திரை பொருட்காட்சி என்ற பெயரில் கண்காட்சி ஒன்றை இந்த மைதானத்தில் தான் நடத்துவது வழக்கம். அதேபோல, வருடம் தோறும் புத்தகக் கண்காட்சியும் இங்கே தான் நடந்து வருகிறது.
சங்கரதாஸ் பெயரை போற்றி
தற்போது தமிழ்நாட்டில் எந்த நாடக மேடையானாலும் சங்கரதாஸ் பெயரைப் போற்றியே நாடகம் தொடங்கப்படும். 1891-ஆம் ஆண்டில் தனது 24-ஆவது அகவையில் அப்பணியைத் துறந்து நாடகத்துறையில் ஈடுபட்டார்.
சங்கரதாசர் – ஆசிரியர்
சனீஸ்வரன், எமன், இராவணன், இரணியன் போன்ற எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் ஆசிரியராகவும் சிறிது காலம் பணியாற்றினார். பின்னர் சாமி நாயுடு என்பவரின் நாடக சபையில் சங்கரதாசர் சில காலம் ஆசிரியராக இருந்தார்.
40 நாடகங்கள்
அப்பொழுது நாடகத்தின் சூத்திரதாரராகவும் நடித்தார். சங்கரதாஸ் சுவாமிகள் சுமார் 40 நாடகங்களை எழுதினார். அதில் தற்பொழுது 18 நாடகங்களே கிடைத்திருக்கின்றன.
மக்கள் – கோரிக்கை
நாடகத் துறைக்கு பெருமை சேர்த்த சங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை மீண்டும் சூட்ட வேண்டும் என மதுரை மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.