Tuesday, April 16, 2024
Homeஅறிந்து கொள்வோம்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

தமிழ்நாட்டில் முதன் முதலில் அமைக்கப்பட்ட கட்டுமானக் கோயில் மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் ஆகும்.

இது முதலாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டப்பட்டது.

தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக்கோயில் 45 அடி உயரம் கொண்டது.

இக்கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலசயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.

மாமல்லபுரத்தில் வங்காள விரிகுடா கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளதால் இது மாமல்லபுரம் கடற்கரைக் கோயில் என்று அழைக்கப்படுகிறது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

இது கி. பி. எட்டாம் நூற்றாண்டு (700-728) முதல் கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும்.

இக்கோயிலின் உருவாக்கத்தின் போது இந்த இடமானது ஒரு செயல்பட்டுக் கொண்டிருந்த துறைமுகமாக இருந்தது.

அப்போது இந்த இடத்தைப் பல்லவ அரசமரபின் இரண்டாம் நரசிம்மவர்மன் ஆண்டுக் கொண்டிருந்தார்.

இக்கடற்கரைக் கோயிலை 1984ல் யுனெஸ்கோ நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.

மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்

இக்கடற்கரை கோயில், தென்னிந்தியாவின் கற்ளால் கட்டுமானம் செய்யப்பட்ட கோயில்களில் மிகவும் தொன்மையானதாகும்.

தென்னிந்தியாவின் பழமையான கட்டிடக்கலைகளைக் கொண்ட கோயில்களில் ஒன்றாக இந்த கோயில் விளங்குகிறது. இது இரண்டாம் நரசிம்ம வர்மனின் ஆட்சிக் காலத்தில் சுமார் கிபி 700 வாக்கில் கட்டப்பட்டது.

 

இதையும் படியுங்கள் || கரிகாலன் கட்டிய கல்லணை! தமிழரின் பெருமையை அறிவோம்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments