Tuesday, December 5, 2023
Homeஉடல்நலம் அறிவோம்மங்குஸ்தான் பழம் நன்மைகள், மருத்துவ குணங்கள், சாப்பிடும் முறை

மங்குஸ்தான் பழம் நன்மைகள், மருத்துவ குணங்கள், சாப்பிடும் முறை

மங்குஸ்தான் பழம் நன்மைகள்

  1. சுவை மிகுந்த மங்குஸ்தான் பழத்தின் 100 கிராம் சதையில் 63 % கலோரி ஆற்றல் உடலுக்கு கிடைக்கிறது.
  2. இது உடலுக்கு தேவையான உடனடி ஆற்றலை வழங்கக்கூடியது.
  3. மங்குஸ்தான் பழத்தில் உடலுக்கு கேடு விளைவிக்கும் கொலஸ்டிரால் போன்ற கெட்ட கொழுப்புகள் அறவே இல்லை.
  4.  மங்குஸ்தான் பழத்தில் எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்துக்களைக் கொண்டுள்ளது.
  5. 100 கிராம் மங்குஸ்தான் பழத்தில் ஆர்.டி.ஏ. அளவில் 13 சதவீதம் நார்ப்பொருட்கள் அடங்கி உள்ளன.
  6. உடல் கொழுப்பை அல்லது உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு மங்குஸ்தான் பழம் ஒரு சிறந்த வரபிரசாதம்.
  7. மங்குஸ்தான் பழத்தைத் தினமும் ஒரு முறை என மூன்று வாரங்களுக்குச் சாப்பிட்டு வந்தால் உடல் எடையைக் குறைக்க முடியும்.
  8. மங்குஸ்தான் பழத்தில் அதிக அளவு ‘வைட்டமின் சி’ சத்து அடங்கியுள்ளது. இது புளூ காய்ச்சல் போன்ற நோய்த் தொற்றுகள் ஏற்படாமல் காக்கும்.
  9. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஆக்சிஜன் பிரீ-ரெடிகல்களை விரட்டும் தன்மையும் ‘வைட்டமின் சி’க்கு உண்டு. மங்குஸ்தானில் தயாமின், நியாசின், போலேட் போன்றவை அதிக அளவில் காணப்படுகின்றன.
  10. கார்போஹைட்ரேட், புரதம், கொழுப்பு போன்றவற்றின் வளர்ச்சியை மாற்றும் பணிகளில் இந்த வைட்டமின்கள் அதிக அளவில் உதவுகின்றன.
  11. மங்குஸ்தான் பழத்தில் நார்ச் சத்து அதிகளவு உள்ளது. மங்குஸ்தான் பழங்களை அதிகம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனைகள் நீங்கும்.
  12. உடற் செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஒரே சீராக கட்டுக்குள் இருக்கவும் பொட்டாசியம் தாது மிகவும் அவசியமானது.
  13. இது பக்கவாதம் மற்றும் இதயவியாதிகள் ஏற்படாமலும் காக்கும் ஆற்றல் கொண்டது.
  14. கண்களின் பார்வைத் திறன் தெளிவாக இருக்க வைட்டமின் A, அஸ்கார்பிக் அமிலம், நிகோடினிக் அமிலம் போன்றவை மிகவும் முக்கியம்.
  15. மங்குஸ்தான் பழத்தில் இந்த சத்துக்கள் அதிகம் உள்ளன.
  16. எனவே, மங்குஸ்தான் பழங்களைத் தினம்தோறும் அல்லது வாரத்திற்கு இரண்டு முறையாவது சாப்பிட்டு வருவது கண் பார்வை திறனுக்கு மிகவும் உகந்தது.
  17. மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் இரத்தப் போக்கை குறைக்க மங்குஸ்தான் பழம் உதவுகிறது.
  18. பருவ காலங்களில் மங்குஸ்தான் பழங்களை வாங்கி சாப்பிடுவது மிகவும் நல்லது.

சாப்பிடும் முறை

  1. மேற்தோலை நீக்கிவிட்டு வெள்ளை நிறத்திலான மங்குஸ்தான் பழங்களை அப்படியே சாப்பிடலாம்.
  2. ஒரு சில பழங்களில் சிறு கொட்டைகள் இருக்கும்.கோடை வெப்பம் தணிப்பதிலும், தாகம் மற்றும் நாவறட்சியை தணிக்கவும் மங்குஸ்தான் ஜூஸ் உதவுகிறது.
  3. தேங்காய் பால், மக்காச்சோள மாவு மற்றும் மங்குஸ்தான் பழத்துண்டுகள் சேர்த்து செய்யப்படும் ‘மங்குஸ்தான் கிளாபோட்டி’ சாப்பிட்ட பிறகு அருந்தும் பிரபல பானமாகும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments