தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்க இயக்குனர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஏற்கனவே ரஜினியின் ‘எந்திரன்’, கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’, அஜித்குமாரின் பில்லா’, விக்ரமின் ‘சாமி’, தனுஷின் ‘வேலை இல்லா பட்டதாரி’ உள்ளிட்ட படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.
மரகத நாணயம் படத்தில் ஆதி நாணயம் படத்தின் இரண்டாம் பாகமும் சூர்யாவின் ‘சிங்கம்’, சுந்தர்.சி யின் ‘அரண்மனை’ 3 பாகங்கள் வெளியானது. தற்போது ‘இந்தியன்’ 2-ம் பாகமும் உருவாகி வருகிறது. இந்த நிலையில் மரகத தயாராக இருப்பதாக அறிவித்து உள்ளனர். இந்த படம் 2017-ல் வெளியானது. இதில் ஆதி, நிக்கி கல்ராணி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த், டேனியல் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். ஏ.ஆர்.கே.சரவணன் டைரக்டு செய்து இருந்தார். நகைச்சுவை கலந்த திரில்லர் படமாக உருவாகி இருந்தது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததால் தற்போது மரகத நாணயம் 2-ம் பாகத்தை எடுக்க இருப்பதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்து உள்ளார்.