Friday, September 22, 2023
Homeசெய்திகள்திருமண சான்று, வில்லங்க சான்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண சான்று, வில்லங்க சான்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

திருமண சான்று, வில்லங்க சான்று ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். 

பத்திர பதிவுத்துறை தகவல்.

விண்ணப்பதாரர் அளிக்க வேண்டிய ஆவணங்கள், சான்று, விபரங்கள் குறித்த பட்டியலை வெளியிட வேண்டும். விண்ணப்பம், இணைப்பு ஆவணங்கள், கட்டணங்கள் ஆகியவற்றை இணையதளம் வாயிலாகவே மேற்கொள்ள வேண்டும்.

இந்த விண்ணப்பங்கள் தொடர்பாக கூடுதல் தகவல்கள், ஆவணங்கள் தேவைப்பட்டால், சம்பந்தப்பட்ட சார் பதிவாளர்கள், ஆன்லைன் வாயிலாகவே கேட்டு பெற வேண்டும். பரிசீலனை முடிந்த நிலையில் சான்றுகளை, மக்கள் ஆன்லைன் முறையிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.

இந்த இரண்டு சான்றுகளையும், விண்ணப்பம் பதிவான நாளில் இருந்து, மூன்று நாட்களுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும். தாமதம் ஏற்பட்டதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட அலுவலர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதுடன் அபராதம் விதிக்கப்படும். சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரப்பதிவு பணிகள், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டு உள்ளன.

வில்லங்க சான்று பெற, ஆன்லைன் முறையில் விண்ணப்பித்தால் போதும் என்ற முறை, 2019ல் அறிமுகமானது. இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும், ஆவண எழுத்தர் அலுவலகங்கள் வாயிலாக, ஒரு விண்ணப்பத்திற்கு 200 – 400 ரூபாய் லஞ்சம் வசூல் நடப்பதாக புகார்கள் எழுகின்றது. இதை தடுக்க, பதிவுத்துறை உயர் அதிகாரிகள் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments