Thursday, March 28, 2024
Homeமருத்துவம்தண்டு கீரையின் மருத்துவ நன்மைகள்

தண்டு கீரையின் மருத்துவ நன்மைகள்

தண்டு கீரையின் மருத்துவ நன்மைகள் வாரம் 2 நாட்கள் கட்டாயம் சாப்பிடுங்க…ஏராளமான நன்மைகளை பெறலாம்.

தண்டுக்கீரை ஆறு மாதங்கள் வரை வளரக் கூடியது. ஆனால், 100 முதல் 120 நாட்களுக்குள் இந்தக் கீரையை அறுவடை செய்து சமைக்கும் போதுதான் தண்டுகள் நார் இல்லாமல் இளசாகவும், உண்ணுவதற்குச் சுவையாகவும் இருக்கும். முதிர்ந்த கீரையில் மிக அதிக அளவிலான எாிபொருள் கிடைக்கிறது. தண்டுக்கீரையைப் பருப்பு வகைகளோடு அவியல், மசியல், பொறியல் போன்ற பல விதங்களாக தயார் செய்தும் உண்ணலாம்.

மருத்துவப் பயன்பாடு :

தண்டுக்கீரையில் இரண்டு வகைகள் உள்ளன. தண்டு வெண்ணிறமாக உள்ள கீரையை வெங்கீரைத்தண்டு என்றும், செந்நிறகீரைத்தண்டு என்றும், செந்நிறமாக உள்ள கீரையை செங்கீரைத் தண்டு என்றும் அழைக்கப்படுகின்றது. செங்கீரைத்தண்டு, வெங்கீரைத்தண்டு ஆகிய இரண்டு வெவ்வேறு மருத்துவப் பண்புகளைக் கொண்டிருப்பதாக மருத்துவ நுால்கள் கூறுகின்றன. செங்கீரைத்தண்டு தீராத பித்த நோயைத் தீர்க்கிறது. 

இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகம் உள்ளவர்கள் வாரத்திற்கு 3 அல்லது 4 நாட்கள் கண்டுக்கீரையை உணவுடன் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பெண்களின் பெரும்பாட்டையும், உடல் வெப்பத்தையும் குணப்படுத்துகிறது. மேலும் மாதவிடாய் வலி சற்று குறையும். 

கருப்பை கோளாறுகளுக்கும் இந்த வகைக் கீரை நல்லது. வெங்கீரைத்தண்டு சிறுநீர் பிரச்சிைனகளைத் தீர்க்கிறது. பித்தத்தை அகற்றுகிறது.

உடல் வெப்பத்தைத் அதோடு, மேகம், வயிற்றுக்கடுப்பு, மூலம், இரத்த பேதி ஆகியவற்றையும் வெங்கீரைத்தண்டு குணப்படுத்துகிறது.

கொழுப்பைக்கரைக்கவும், தேைவயற்ற சதையைக் குறைக்கவும், அதிக உடல் நீரை வெளியேற்றவும் தண்டுக்கீரை பயன்படுகிறது. உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள் தண்டுக்கீரையை அதிக அளவு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

இது இரத்தக் கொதிப்பு, நரம்புத் தளர்ச்சி, வயிற்று ரணம், உள் அழல், மூத்திர கிருச்சிர நோய்களைக் குணப்படுத்த வல்லது. கல்லீரல், நீர்த் தாரையில் அடைபட்ட கற்களை எாித்து விடும் தன்மையுள்ளது.

சொிமான சக்தி, கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது. மூளை வளர்ச்சியையும், ஞாபக சக்தியையும் உண்டு பண்ணக் கூடியது.

முதுகெழும்பை பலப்படுத்துகிறது. பசியைத் துாண்டக் கூடியது. எலும்பு மஜ்ஜை ( உள் மூளை ) வளர்க்கிறது. இரத்தத்தை சுத்திகாிக்கக் கூடியது. மலச்சிக்கலுக்கும் சிறந்தது.

குடல் புண்களை ஆற்றும், கட்டிகளைக் கரைக்கும், இருதய பலவீனத்தைப் போக்கும். இரத்ததில் உள்ள கொழுப்பைக் கரைக்கும், மூச்சுக் குழல், குடல் போன்றவற்றி்ல் ஏற்படும் தடைகளை நீக்கவும், பித்தத்தை நீக்கும் சக்தி படைத்தது. மனிதனின் ஆக்ரோஷ குணத்தைப் படிப்படியாகக் குறைக்கவல்லது.

குடல் புண் உள்ளவர்கள் இந்தக் கீரையை மசியலாகவோ அல்லது லேசாக வதக்கியோ உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. அாிசி கழுவிய நீாில் இதன் தண்டைச் சேர்த்து புளி விட்டு மண்டியாகச் செய்து சாப்பிட்டால் ருசி அதிகமாகும். இது உடல் பலத்தையும், அழகையும், ஒளியையும் கொடுக்கும், மூல நோயைக்கு மிகவும் சிறந்தது.

சத்துக்கள் :

தண்டுக்கீரையில் வைட்டமின் ஏ மற்றும் சி, பாஸ்பரஸ், கால்சியம், இரும்பு ஆகிய தாதுப்பொருல்கள் அதிக அளவில் இருக்கின்றன. இதில் தாமிரச்சத்து, மணிச்சத்து, மாவுச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தயமின், ரிபோஃப்ளேவின், நிகோடினிக் அமிலம், ஆக்சாலிக் அமிலம், புரதம், தாது உப்புக்கள், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கந்தகம், குளோாின் போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.

அத்தியாவசிய சத்துகள் :

உடலின் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு வைட்டமின், இரும்புச் சத்து, பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் இதர தாதுக்கள் அவசியமாக உள்ளன. 

தண்டு கீரையில் இந்த எல்லா சத்துக்களும் அதிகளவில் நிறைந்திருக்கின்றன. எனவே தண்டு கீரையை வளரும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினர், கருவுற்றிருக்கும் பெண்கள், நடுத்தர வயதுடையவர்கள் என அனைவரும் சாப்பிடுவதற்கேற்ற இயற்கை உணவாக இருக்கிறது.

சிவப்பு தண்டு கீரை நன்மைகள் :

சிவப்பு கீரையானது ஒரு பல்துறை காய்கறியாகும். இது பலரால் விரும்பப்படும் கீரையாக உள்ளது. ஆனால் குழந்தைகள் பெரும்பாலும் கீரைகளை வெறுப்பவர்களாகவே இருக்கின்றனர்.

உங்கள் குழந்தைக்கு சிவப்பு கீரையை சுவையான வழியில் உணவாக கொடுக்கும் வழிகளை நீங்கள் கண்டறியும்போது அது அவர்களுக்கு பலவிதமாக பலனளிக்கிறது. இந்த இலை காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதற்கு முன்பு அதன் ஆரோக்கிய நன்மைகளை பார்ப்போம்.

உங்களுக்கு தொடர்ந்து மல சிக்கல் இருக்கும்பட்சத்தில் நீங்கள் சிவப்பு கீரையை உண்பது உங்களுக்கு பலனளிக்கும். ஏனெனில் இதில் அதிகமாக நார்ச்சத்து உள்ளது. இது உங்கள் குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. உங்கள் பெருங்குடல் ஆரோக்கியத்திற்கும் இது கணிசமான அளவில் பயனளிக்கிறது. இதனால் உங்கள் வயிறு பகுதியானது ஆரோக்கியமாக இருக்க இது உதவுகிறது.

 

இதையும் படியுங்கள் : தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments