Thursday, March 28, 2024
Homeஉடல்நலம்இஞ்சியின் மருத்துவம் குணங்கள் பற்றி அறிவோம்

இஞ்சியின் மருத்துவம் குணங்கள் பற்றி அறிவோம்

இஞ்சியின் மருத்துவம் குணங்கள் பற்றி அறிவோம்

1. இஞ்சியை துவையலாக்கி சாப்பிட – வயிறு உப்புவது, இரைச்சல் தீரும்.

2. காலையில் இஞ்சி சாறில் உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட – பித்தம், தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும்.

3. பத்து கிராம் இஞ்சி‌ பூண்டு இரண்டையும் அரைத்து ஒருகப் வெந்நீரில் கலந்து காலை, மாலை இரண்டு நாட்கள் சாப்பிட – மார்பு வலி தீரும்.

4. இஞ்சி சாறோடு தேன் கலந்து சூடாக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் சாப்பிட்டு வெந்நீர் குடித்துவர – தொந்தி கரைந்து விடும்.

5. இஞ்சி சாறில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட – நல்ல பசி ஏற்படும்.

6. இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட – ஜீரணம் ஆகும்.

7. இஞ்சியை வதக்கி, தேன் விட்டு கிளறி, நீர் விட்டு, கொதிக்க வைத்து நீரை காலை, மாலை குடித்துவர – வயிற்று போக்கு தீரும்.

8. இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின் நீரை எடுத்து துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட – வாய்வு தொல்லை நீங்கும்.

9. இஞ்சி சாறில் தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர – நோய் தடுப்பு திறன், உற்சாகம், இளமை பெருகும்.

10. இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து ஒரு வாரம், காலையில் ஒரு கரண்டி வீதம் குடித்துவர – நீரிழிவு நோய் குறையும்.

இஞ்சியின் மருத்துவம் குணங்கள்

11. இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர – ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

12. இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட – வயிறு நோய்கள் தீரும். உடம்பு குறையும்.

13. இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட – மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

14. இஞ்சியை சுட்டு உடம்பில் தோய்த்து சாப்பிட – பித்த, கப நோய்கள் தீரும்.

15. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட – வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.

16. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட – பித்தம், அஜீர ணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும்.

 

இதையும் படியுங்கள் || மங்குஸ்தான் பழம் நன்மைகள், மருத்துவ குணங்கள், சாப்பிடும் முறை

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments