Friday, March 29, 2024
HomeUncategorizedஉளுந்து மருத்துவ பயன்கள் ||  Medicinal uses of lentils

உளுந்து மருத்துவ பயன்கள் ||  Medicinal uses of lentils

உளுந்து தானிய வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்களை கொண்டது. காலை உணவில் அதிகளவு ஊட்டச்சத்து தேவைப்படுவதால் உளுந்தை வைத்து செய்யப்படும் இட்லி, வடை, தோசை போன்ற உணவுகள் சிறந்த ஊட்டச்சத்தை உடலுக்கு அளிக்கிறது

தசைகள் தான் நம் உடலுக்கு வசீகரம், பொலிவு, தேஜஸ் போன்றவற்றை தருகிறது. பெண்கள் பருவம் அடையும் பொழுது உளுந்தும் முட்டையும் முக்கிய உணவாக கொடுக்கப்படுகிறது.

எலும்புகள்

  • நமக்கு வயது ஏற, ஏற நமது உடலில் உள்ள எலும்புகளும், மூட்டு பகுதியிலும் வலிமை குன்றி உடல் இயக்கத்தை குறைத்து விடும் ஆபத்து உள்ளது. கருப்பு உளுந்தில் கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளன. கருப்பு உளுந்து கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடலில் எலும்புகள், மூட்டுகளின் வலிமை அதிகரிக்கும். ஆர்த்திரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கும்.
  • கடுமையான மற்றும் கொடிய நோயின் பாதிப்பிலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக சாப்பிட்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு மிகவும் நல்லது.

இதயம்

நமது இதயம் நன்றாக இருக்க நமது உணவில் கால்சியம், பொட்டாசியம், நார்ச்சத்து அதிகம் இருப்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.

இந்த சத்துக்கள் அனைத்தும் நிறைந்த கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை சாப்பிடுவதால் நமது இருதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தை உறுதி செய்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் காக்கிறது.

நரம்பு பிரச்சனைகள்

இன்று பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் மிகுந்த ஒரு வாழ்க்கை முறையே இருக்கிறது. இதனால் மூளை மற்றும் உடலில் இருக்கும் நரம்புகளில் அழுத்தம் ஏற்பட்டு நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.

கருப்பு உளுந்து கொண்டு செய்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் நரம்பு மண்டலத்தை ஆசுவாசப்படுத்தி நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை மற்றும் மன அழுத்தங்கள் போன்றவற்றை நீக்குகிறது.

உளுந்து மருத்துவ பயன்கள்

அறிவியல் பூர்வ பயன்கள்

  • உளுத்தம்பருப்புடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகபடியான சூடு தணியும்.
  • உளுந்து வடை பசியை போக்கும், உடலுக்கு குளிர்ச்சியைத் தரும், மற்றும் பித்தத்தைக் குறைக்கும்.
  • சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
  • நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
  • உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
  • 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
  • உளுந்தில் உள்ள தாது உப்புக்கள் மற்றும் விட்டமின்கள் உடலில் சீரான வளர்ச்சிதை மாற்றம் நடைபெற உதவுவதோடு உடலில் வலி உள்ள பகுதிகளை சரிசெய்கின்றன.
  • உளுந்துடன் முட்டை மற்றும் பஞ்சுடன் சேர்த்து எலும்பு முறிவுச் சிகிச்சைக்கு கட்டுப்போடும் பழக்கம் நாட்டு மருத்துவத்தில் உண்டு. மேலும் உளுந்தில் உள்ள எதிர்ப்பு அழற்சி பண்பானது உடலினை அழற்சியிலிருந்து பாதுகாக்கிறது.
  • உளுந்தம்பருப்பில் உள்ள கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவை எலும்புகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  • உளுந்தில் உள்ள ஊட்டச்சத்துகளுக்காக கர்பிணிகள் தங்களது உணவில் அடிக்கடி உளுந்தினைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் உள்ள இரும்புச்சத்தானது கர்பிணிகளுக்குத் தேவையான ஹீமோகுளோபின்களை வழங்குவதோடு இரத்த ஓட்டத்தைச் சீராக்கும். மேலும் இதில் உள்ள புரதச்சத்து, நார்ச்சத்து, போலேட்டுகள் போன்றவை கர்பிணிக்கும், குழந்தைக்கும் மிகவும் அவசியமனவையாகும். எனவே கர்ப்பிணிகள் உளுந்தினை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

இதையும் படியுங்கள் || தேங்காய் எண்ணெய்யின் 5 அற்புத பலன்கள்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments