உருளைக் கிழங்கு சோலானம் டியூபரோசம் (Solanum tuberosum) என்னும் செடியின் வேரில் இருந்து பெறும் மாவுப்பொருள் நிறைந்த, சமையலில் பயன்படும், ஒருவகைக் கிழங்காகும்.
உருளைக் கிழங்குத் தாவரம் நிழற்செடி (nightshade) குடும்பத்தைச் சேர்ந்தது. அரிசி, கோதுமை, சோளம் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக உலகில் நான்காவதாக அதிகம் பயிர் செய்யப்படும் செடியினமாகும்.
உருளைக் கிழங்கு பூமிக்கடியில் விளைகின்ற ஒரு கிழங்கு வகை ஆகும். இது தென் அமெரிக்க கண்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு பயிர்வகை.
பிற்காலத்தில் காலனி ஆதிக்க நாட்டின் வியாபாரிகளால் உலகெங்கிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. உருளைக்கிழங்கை நன்கு வேக வைத்து அப்படியே சாப்பிட்டாலே பசியை போக்க வல்ல ஒரு உணவாக இருக்கிறது.
இந்த உருளைக்கிழங்கு உலக மக்கள் அனைவரின் வரவேற்பை பெற்ற ஒரு உணவாக இருக்கிறது.
உருளைக்கிழங்கின் பயன்கள்
- உருளைக்கிழங்கு என்பது கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்த ஒரு உணவு வகையாகும். அதிக சக்தியை அளிக்கக் கூடிய உணவாகவும் அதே நேரத்தில் சுலபமாக செரிமானம் ஆகக்கூடிய ஒரு உணவு வகையாக உருளை கிழங்கு கருதப்படுகிறது. எனவே தான் கடினமான உணவுகளை செரிமானம் செய்ய முடியாத நிலையில் இருக்கும் குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கு உருளைக்கிழங்கு கொண்டு செய்யப்பட்ட உணவுகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். அதே நேரம் ஒரே நாளில் அதிக அளவில் உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் கூறுகின்றனர்.
- உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்பு காரர்களுக்கும் இது மிகவும் நல்லது. உருளையை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.
- அடிக்கடி உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உடலால்ஏற்றுக் கொள்ளப்பட்டு செரிமான உறுப்புகளின் சீரான இயக்கத்தைத் சரி செய்து, மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.
- உருளைக்கிழங்கை வேக வைத்து, நன்கு பசைபோல் அரைத்து பசும்பாலில் கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு ஒரு மணி நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குகிறது. முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவதை முற்றிலும் தடுத்து முக அழகை கூட்டுகிறது.
- உருளைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமாகவும் மற்றும் சிறிதளவு புரதமும் நிறைந்துள்ளது. ஆகவே ஒல்லியாக இருப்பவர்களின் எடையை அதிகரிப்பதற்கு, உருளைக்கிழங்கு உறுதுணையாக இருக்கும்.
- இந்த வைட்டமின் சி சத்து, குழந்தைகளிடம் அதிகம் காணப்படும் ஸ்கர்வி நோய் ஏற்படாமல் தடுக்கிறது. எனவே தான் இந்த வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த உருளைக்கிழங்குகளை சிறு குழந்தைகள் அடிக்கடி சாப்பிடக் கொடுப்பதால் அவர்களுக்கு ஸ்கர்வி நோய் ஏற்படும் ஆபத்து வெகுவாகக் குறைவதாகவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
- புற்று நோயை தடுக்கக்கூடிய சக்தி கொண்ட உணவுகளில் ஒன்றாக உருளைக்கிழங்கு இருக்கிறது. வைட்டமின் சி சத்து மற்றும் ஆன்டி ஆக்சிடண்டுகள் அதிகம் உள்ளன. மேலும் சியாசாந்தின் மற்றும் கரோட்டின் சத்துகளும் இருக்கின்றது. இந்த சத்துக்கள் நமது ரத்தத்தில் உருவாகும் ஃப்ரீ ரேடிக்கல்களை அணுக்களை உருவாகாமல் தடுத்து, புற்றுநோய் ஏற்படாமல் காக்கிறது என மேலை நாடுகளில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்திருக்கின்றன.
இதையும் படியுங்கள் || கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்