Friday, March 29, 2024
Homeமருத்துவம்மரமஞ்சளின் மருத்துவ பயன்கள்

மரமஞ்சளின் மருத்துவ பயன்கள்

  • மரமஞ்சள் என்பது ஏறுகொடி. இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும்,  இலங்கையிலும் காடுகளில் விளைகின்றது. காலேயகம், தாறவி போன்ற மாற்றுப் பெயர்களும் உண்டு. மரமஞ்சள் தண்டு கட்டைகளே மருத்துவத்தில் பயன்படுபவை.
  • மஞ்சள் ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும். மஞ்சள் கிழங்குகள் கார்ப்பு, கைப்புச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டவை. கல்லீரலைப் பலப்படுத்தும்; பசியை அதிகமாக்கும்; காய்ச்சலைத் தணிக்கும்; குடல் வாயுவை அகற்றும்; தாதுக்களைப் பலப்படுத்தும்; வீக்கம், கட்டி ஆகியவற்றை கரைக்கும்.
  • மஞ்சள் நீண்டு உருண்ட, ஈட்டி வடிவமான இலைகள் கொண்ட தண்டுகள் அற்ற  செடி.
  • தமிழகமெங்கும், சமவெளிப் பகுதிகள் மற்றும் மலைச் சரிவுகளில் இதன் உணவு மற்றும் மருத்துவ உபயோகங்களுக்காகப் பயிர் செய்யப்படுகின்றது.
  • மரமஞ்சள் அதிக மணமுள்ளவை. பெர்பெரின் எனப்படும் அல்கலாய்டு அதிக அளவில் இந்த தாவரத்தில் காணப்படுகின்றது. மரமஞ்சள் தண்டு கட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இவை காய்ந்த நிலையில் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கம்.

மரமஞ்சளின் மருத்துவ பயன்கள்

  • தண்டு கட்டைகள் கைப்புச் சுவையும், வெப்பத்தன்மையும் கொண்டவை; இவை உடல் வெப்பத்தை அகற்றும்; பசியைத் தூண்டும்; உடலை பலப்படுத்தும்; சுவாச நோய்கள், மூலம், மயக்கம் போன்றவற்றைக் குணப்படுத்தும். மருந்துகளில் மரமஞ்சளும் சேர்கின்றது. மேலும் குடற்புண், அஜீரணம் போன்றவற்றிற்கான மருத்துவத்திலும் நேரடியாக உபயோகமாகின்றது.
  • மரமஞ்சள் கட்டைகளை இடித்து, தூளாக்கி 5 கிராம் அளவு தூளை 2 டம்ளர் நீரில் இட்டு ஊற வைத்து 1 டம்ளராக குறையும் வரை காய்ச்சி வடிகட்டி குடித்தால் காய்ச்சல் நாக்குச் சுவையின்மை குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி பாலில் ஊற வைத்து அரைத்து பசையாக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் பூசி வந்தால் தோல் நோய்கள் குணமாகும்.
  • மரமஞ்சள் கட்டையை நீர் விட்டு அரைத்து தலை, உடலில் பூசி ½ மணிநேரம் ஊற வைத்து பின்னர் வெதுவெதுப்பான நீரில் குளிக்க உடல் வெப்பம் குறையும்.
  • சளியினால் தொண்டை அடைப்பு ஏற்பட்டால் தேனுடன் மஞ்சள் தூள் கலந்து காலையும் மாலையும் இரண்டு வேளை சாப்பிட்டால் சளி அடைப்பு சரியாகி விடும்.
  • நம் உடலை நோயிலிருந்து காக்கும் திறன் மஞ்சளுக்கு உண்டு. மஞ்சள் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது;
  • தொற்று ஏற்படாமல் தடுக்கும் மாபெரும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. இதனால் தான், இந்து கலாசாரத்தில்
  • முதன்மையான முக்கியத்துவம் மஞ்சளுக்கு கொடுக்கப்படுகிறது.
  • ஆயுர்வேத மருத்துவத்தில் அதிகளவில் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. நிம்மதியைக் கொடுக்கும் திறன், மஞ்சளின் வாசனைக்கே உரிய குணம். அதன் நிறம் தைரியத்தை கொடுக்கும். மஞ்சள் கிழங்கின் இத்தகைய பெருமை பற்றி யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.

Also Read || அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் ஆவாரம்பூ

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments