இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அரசு தலைமை மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு இராமேஸ்வரத்தில் உள்ள ஸ்ரீ பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவிகளுடன் கலந்துரையாடி அவர்களின் கோரிக்கை குறித்து கேட்டறிந்தார்.
பள்ளியை சீரமைக்க ஏற்பாடுகள்
பின்னர் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டடம், கூடுதல் விடுதி வசதி அமைத்து கொடுத்தல் மற்றும் வகுப்பறையில் மாணவிகளுக்கு போதியளவு மின்விசிறிகள் அமைத்திடவும், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் அறிவுறுத்தியதுடன், ஒவ்வொரு வகுப்பறையிலும் மாணவிகளின் காலணிகள் வெளியில் விட்டு வருவதை கண்டறிந்து ஒவ்வொரு மனிதனின் உணர்வுகளை மதித்து நடக்கும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் வழிநடத்திச் செல்கிறார்கள்.
அதனைத் தொடர்ந்து மண்டபத்திலுள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கு சென்று பார்வையிட்டு மாணவர்களுக்கு வழங்க உள்ள உணவின் தரம் குறித்து பார்வையிட்டு மாணவர்களுக்கு தேவையான உட்கடமைப்பு வசதிகள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்தவுடன் நன்றாக பராமரித்திட விடுதி காப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார்.
முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்
இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் சந்திரன் மற்றும் சிந்தனை செல்வன் சிவக்குமார் , தளபதி , நாகை மாலி , பரந்தாமன் , பூமிநாதன் , ஜவாஹிருல்லா முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழு தலைவர் மாண்புமிகு அன்பழகன் கலந்து கொண்டனர்.