கோவில்களில் வழிபட வேண்டிய முறைகள் பற்றி அறிவோம்.
1. இரவு 9 மணி முதல் – அதிகாலை 3 மணிவரை – நதிகளில் குளிக்கக் கூடாது.
2. அமாவாசை நாளன்று வீட்டில் சமைத்து தான் சாப்பிட வேண்டும். வெளி நபர்களை வீட்டிற்கு அழைத்து சாப்பிட வைக்க வேண்டும்.
3. சூடம், தீபத்தை கையில் ஏந்தியவாறு கோவில்களில் தரிசிக்கக் கூடாது.
4. முகத்தில் 1 தடவையும், முழு உருவத்திற்கு 3 தடவையும், காலிற்கு 4 தடவையும் சூடத்தை இறைவனுக்கு காண்பிக்க வேண்டும்.
5. கோவிலுக்கு செல்லுவதற்கு முன் வீட்டில் கோலம், வீட்டில் விளக்கு ஏற்றி விட்டுத்தான் தரிசிக்க செல்ல வேண்டும்.
6. விளக்கு எரியும்போது எண்ணெய், நெய் கையில் படக் கூடாது. அதேபோல் தலையில் தடவ கூடாது.
7. இறைவனை தரிசிக்கும் போது இவைகளைக் கொண்டு தான் தரிசிக்க வேண்டும்.
சிவன் – வில்வம் இலை.
விஷ்ணு – துளசி.
விநாயகர் – அருகம்புல்.
பிரம்மா – அத்தி இலை.
8. தமிழ் மாதத்தில் செய்ய வேண்டிய தானங்கள்:
சித்திரை மாதம் – நீர்மோர், விசிறி, செருப்பு, குடை, தயிர் சாதம், பலகாரம்.
வைகாசி மாதம் – பானகம், ஈயப்பாத்திரம், வெல்லம்.
ஆனி மாதம் – தேன்.
ஆடி மாதம் – வெண்ணெய்.
ஆவணி மாதம் – தயிர்.
புரட்டாசி மாதம் – சர்க்கரை.
ஐப்பசி மாதம் – உணவு, ஆடை.
கார்த்திகை மாதம் – பால், விளக்கு
மார்கழி மாதம் – பொங்கல்.
தை மாதம் – தயிர்.
மாசி மாதம் – நெய்.
பங்குனி மாதம் – தேங்காய்.
9. வேல், சிவலிங்கத்தை வைத்து பெண்கள் அபிஷேகம் செய்யகூடாது.
10. அடியார்கள் மற்றும் சிவ தீட்சை பெற்றவர்கள் மட்டுமே தண்ணீரில் திருநீற்றை குழைத்து பூசிகொள்ள கூடாது.
இதையும் படியுங்கள் || கோவில்களில் தீப எண்ணெய், தீபம் ஏற்றும் திசைகள், திரிகளின் பயன்கள் பற்றி அறிவோம்