நீண்ட ஆயுளோடு வாழ கடைபிடிக்க வேண்டிய முறைகள்
1. அதிகாலை எழுந்தவுடன் காலை கடமைகளை முடித்துவிட்டு, இரவு ஊற வைத்த வெந்தயத்தை சிறிதளவு எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட வேண்டும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தக்கொதிப்பு, சர்க்கரை சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
2. காலை, மாலை என இருவேளையும் அவசியம் குளிக்க வேண்டும். அதேபோல் காலை எழுந்தவுடன், இரவு சாப்பிடுவதற்கு முன்பு மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் மலம் கழித்தால் மலச்சிக்கலை உண்டு பண்ணும்.
3. ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்காருவதை தவிர்க்க வேண்டும். சிறுநீர் வருகிறது என்றால் உடனடியாக சிறுநீர் கழியுங்கள் அடக்கி வைக்காதீர்கள். சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்தால் கல்லடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
4. காலையில் உணவு அருந்துவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தோல் நீக்கிய சிறிய இஞ்சி துண்டை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகள் கரையும், தொப்பை குறையும்.
5. உள்ளாடைகளை தினந்தோறும் துவைத்து காய்ந்த பின்பு போட வேண்டும். அதேபோல் உள்ளாடைகளை மூன்று மாதத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்ற வேண்டும்.
6. புரோட்டா, பிராய்லர் கோழி, பேக்கிங்கில் வரும் குளிர்பானம், தின்பண்டங்கள் ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும். அதேபோல் மது, புகையிலை பழக்கத்தை தவிர்க்க வேண்டும். பலமுறை சுட்ட எண்ணெய்யால் செய்த திண் பண்டங்களை சாப்பிடக்கூடாது.
7. இரவு தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் டி.வி, செல்போன் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். குறைந்தது ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் தூங்க வேண்டும்.
இதையும் படியுங்கள் || சிவன் கோவிலில் வழிபட வேண்டிய முறைகள்