1. சமைத்த மற்றும் சாப்பிட்ட பாத்திரங்களை நீண்ட நேரம் கழுவாமல் வீட்டில் வைக்கக் கூடாது.
2. வீட்டில் தலைமுடி, ஒட்டறைகள் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
3. எக்காரணம் கொண்டும் வீட்டில் பெண்கள் விளக்கு ஏற்றாமல் ஆண்கள் விளக்கு ஏற்றக்கூடாது.
4. வீட்டில் உள்ள குழாய்களில் தண்ணீர் வடிவது, சுவற்றில் நீர் தேங்குவது, செய்யான், பூரான், கரையான் போன்ற விஷ ஜந்துக்கள் உலா வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
5. வீட்டு வாசலில் செருப்பு, துடைப்பான் போன்றவற்றை முறையாக வைக்க வேண்டும்.
6. பூஜை அறை, படுக்கை அறையை வேலையாட்களைக் கொண்டு சுத்தம் செய்யக்கூடாது.
7. இல்லையே இல்லை, வேண்டவே வேண்டாம், வரவே வராது போன்ற வார்த்தைகளை அடிக்கடி வீட்டில் உச்சரிக்கக் கூடாது.
8. வீட்டை வெளிச்சமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
9. காலை, மாலை வேளைகளில் வீட்டில் ஆன்மீக இசைகள், ஆன்மீக சொற்பொழிவு கேட்க வேண்டும்.
10. சூரிய மறைவுக்குப் பின் வீட்டை சுத்தம் செய்யக்கூடாது. அதேபோல் தூங்கக் கூடாது.
11. தினமும் தலை குளிக்கும் பெண்கள் தவிர மற்றவர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிக்கக் கூடாது. அதேபோல ஆண்கள் புதன், வெள்ளி தவிர மற்ற நாளில் தலை குளிக்கக் கூடாது.
12. வீட்டில் சமைத்த உணவு பொருட்களை வீணாகக் குப்பையில் கொட்ட கூடாது. சமைத்த உணவுகள் மீதம் இருந்தால் ஆதரவற்ற நபர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்.
13. வீட்டில் ஈரத் துணிகளை காயப் போடாமல் நீண்ட நேரம் அப்படியே வைத்திருக்க கூடாது.
14. வீட்டில் அரிசி, உப்பு, சர்க்கரை, பால் போன்ற பொருட்கள் தீர்வதற்குள் வாங்கி வைக்க வேண்டும்.