இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும் நடைப்பயணம் தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இராமேசுவரத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற ‘என் மண், என் மக்கள்’ நடைப்பயணத் தொடக்க விழாவில் மேலும் பேசியதாவது தமிழகத்தில் பா.ஜ.க. சார்பில் நடைபெறும். இந்த நடைப்பயணம் வெறும் அரசியல் சார்ந்த பயணம் மட்டுமல்ல, பழைமையான தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு சேர்க்கும் பயணமாகவும், நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் மனதில் தமிழகத்தின் பாரம்பரியத்தையும், தமிழின் பெருமையையும் பதிய வைக்கும் பயணமாகவும் இருக்கும்.
பிரதமரின் தமிழ்நாட்டு பணிகள்
தமிழ் மொழி மீதும் தமிழகத்தின் பாரம்பரிய, கலாசாரங்கள் மீதும் பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டுள்ளார். ஐக்கிய நாடுகள் சபை, ஜி-20 மாநாடு என உலகளவிலான அனைத்து நிகழ்வுகளிலும் பிரதமர் தமிழின் பெருமையைப் பறைசாற்றியுள்ளார். தமிழர்களின் பாரம்பரியத்தைப் பாதுகாக்க வட இலங்கையில் ரூ. 120 கோடியில் கலாசார மையம் அமைத்தது, .
ஊழல் இல்லாத தமிழ்நாடு
தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்துள்ளது.தமிழக பா.ஜ.க. அண்ணாமலை ட்விட்டரில் ஒரு பதிவைப் பகிர்ந்தாலும், அது தி.மு.க. அலுவலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது
168 நாள்கள் நடைபெறும் இந்த நடைப்பயணத்தின் நிறைவில், பா.ஜ.க. மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.அதனுடன், தமிழகத்திலும் மாற்றம் வரும் என்று தெரிவித்தார்.