இராமநாதபுரம் மாவட்ட இராமேஸ்வரத்தில் தமிழக பாரத ஜனதா கட்சி சார்பில் “என் மண்” “என் மக்கள்” என்ற நடைபயண பாத யாத்திரை நிகழ்ச்சி நடை பெற்றது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
அங்கு திருக்கோயில் சார்பாக இணை ஆணையர் மாரியப்பன் உள்பட திருக்கோவில் மூத்த குருக்கள் வரவேற்றனர்.தொடர்ந்து ராமநாதசாமி, சன்னதியில் நடை பெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அதன் பின்னர் திருக்கோவிலில் அமைந்துள்ள திருக்கல்யாணம் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த திருக்கோயில் சார்பாக முக்கிய பிரமுகர் வருகை பதிவேட்டில் திருக்கோவில் குறித்து பதிவு செய்தார் .