அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில் 9 நபர்களுக்கு எம்.எல்.ஏ முருகேசன் ஆணைகளை வழங்கினார்
பரமக்குடியில் நகர்ப்புற மேம்பாட்டு வாழ்விட வாரியத்தின் சார்பாக அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 90 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு 9 நபர்களுக்கு முதல் தவணையினை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் வழங்கினார்.
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் கீழ்
தமிழகத்தில் குடிசை இல்லா வீடுகளை உருவாக்குவதற்காக பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த திட்டத்தினை தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பரமக்குடியில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தில், மானியத்துடன் சுயமாக வீடு கட்டுவதற்கு 36 வார்டுகளில் 96 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, உத்தரவு நகல் நேற்று வழங்கப்பட்டது. 90 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு முதல் கட்டமாக 9 நபர்களுக்கு முதல் தவணை நிதி வழங்கப்பட்டது.
இதனை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் வழங்கினார். இத்திட்டத்தின் கீழ் வீடு கட்டுபவர்களுக்கு ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் மானியம் வழங்கப்படும், நான்கு தவணைகளாக மானிய தொகை வழங்கப்படும். வீடற்ற ஏழை எளியவர்களுக்கு வீடு கட்டுவதற்கு மானியத்துடன் உத்தரவு நகல் வழங்கப்பட்டதால் பயனாளிகள் மகிழ்ச்சி அடைந்து, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.
முக்கிய நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள்
இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது.கருணாநிதி, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் உதவி பொறியாளர் கேர்லின் ரீட்டா, நகர் துணைச் செயலாளர் மும்மூர்த்தி, நகர் மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணன், அப்துல் மாலிக், பிரபா சாலமன், தனலட்சுமி, சதீஷ்குமார் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.