அரியகுடி புத்தூரில் நெல் கொள்முதல் நிலையம் திறப்பு
பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் தொடங்கி வைத்தார்
நெல் கொள்முதல்
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட போகலூர் ஒன்றியம் அரியகுடி புத்தூரில் சுமார் 6.87 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நெல் கொள்முதல் நிலையத்தை பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் திறந்து வைத்தார்.
விலையில்லா ஆடுகள்
அதேபோல் அரியகுடி புத்தூரில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் விவசாயிகளுக்கு பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசன் தலைமை தாங்கி 30 பேருக்கு விலையில்லா ஆடுகளை வழங்கினார்.
முக்கிய பிரமுகர்கள்
இவ்விழாவிற்கு ஒன்றியக்குழு துணை தலைவர் பூமிநாதன், மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அ.புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கார்த்திக்பாண்டியன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் போகலூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சிவசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) இளங்கோ மற்றும் அரியகுடி புத்தூர் கிராம மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.