பரமக்குடி தாலுகாவில் உள்ள ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டங்களில் எம்.எல்.ஏ முருகேசன் பங்கேற்று பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டிருந்தார்.
தமிழக அரசு உத்தரவின் படி
தமிழகம் முழுவதும் நவம்பர் 1ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை தொடர்ந்து பரமக்குடி ,போகலூர், நயினார்கோயில் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட நெல்மடூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா சதீஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. பொது மக்களின் கோரிக்கைகள் பெறப்பட்டு அரசன் மூலம் நடைபெற்ற நலத்திட்ட பணிகள் குறித்த கணக்கு வழக்குகள் பொதுமக்களிடம் காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ராமு, உள்ளிட்டர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பெத்துக்காளை நன்றி கூறினார்.
கிராமப்புறங்களில் நடைபெற்ற கிராம சபை கூட்டம்
பொட்டிதட்டி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் கோவிந்தராஜ் உள்ளிட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் ஊராட்சி செயலர் ரவீந்திரன் நன்றி கூறினார்.
போகலூர் கிராம ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் லலிதா உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் பழனி நன்றி கூறினார்.