Wednesday, March 22, 2023
Homeசெய்திகள்அதிக புயல்கள் உருவாகும் - வானிலை ஆய்வு மையம் தகவல்.

அதிக புயல்கள் உருவாகும் – வானிலை ஆய்வு மையம் தகவல்.

அதிக புயல்கள் உருவாகும் வானிலை ஆய்வு மையம் தகவல்.

வடகிழக்கு பருவமழை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கடந்த ஆண்டை விட அதிக புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே தமிழகத்தில் நடப்பு ஆண்டு சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட அதிகமாக இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.அதன்படி சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, கடலூர், காஞ்சிபுரம், தேனி, மதுரை, திருவள்ளூர், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருநெல்வேலி, வேலூர் மற்றும் விருதுநகர் ஆகிய 17 மாவட்டங்களில் சராசரியை விட கூடுதல் மழைப்பொழிவு இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அரியலூர், கோவை, தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், சேலம், பெரம்பலூர், தஞ்சாவூர், நீலகிரி, திருச்சி, திருவாரூர், தென்காசி, தூத்துக்குடி, திருப்பத்தூர் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி மழைப்பொழிவு இருக்கும் என வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments