மோட்டார் வாகன சட்டங்களும், சட்ட விதிமீறல்களுக்கான அபராதங்களும்.
தினசரி மோட்டார் வாகனம் ஓட்டும் வாகன ஓட்டிகள் அனைவரும் மோட்டர் வாகனச் சட்டத்தையும், அபராதத்தையும் தெரிந்திருக்க வேண்டியவை அவசியமான ஒன்றாகும்.
மோட்டார் வாகன சட்டங்களின் விதிமுறைகள் மற்றும் அபராதத்தொகைகள்.
- பிரிவு 177, போக்குவரத்து விதிமுறைகளுக்கான அபராதத் தொகை குறைந்தபட்சம் 500 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 177A, சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறுதலுக்கான அபராதத் தொகையாக ரூபாய் 500 விதிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 178, பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்பவர்களுக்கான அபராத தொகை ரூபாய் 500.
- பிரிவு 179, போக்குவரத்து அதிகாரிகளின் உத்தரவை மீறுதலுக்கான அபராத தொகை ரூபாய் 2000.
- பிரிவு 180, அங்கீகாரமின்றி உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கினால், அபராத தொகை ரூபாய் 5000.
- பிரிவு 181, உரிமம்இல்லாமல் வாகனத்தை இயக்கினால் அபராத தொகை ரூபாய் 5000.பிரிவு 182, தகுதி இழப்பு செய்தபின் வாகனத்தை இயக்கினால் அபராதத் தொகையாக அதிகபட்சம் ரூபாய் 10,000 மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 182B, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட பெரிய வாகனத்திற்கான அபராத தொகை ரூபாய் 5000.
- பிரிவின் 183 அதிவேகமாக வாகனத்தை இயக்கினால்1000 for LMV ரூபாய் 2000 நடுத்தர பயணிகளின் வாகனம்.
- பிரிவு 184, அதிவேகமாக வாகனத்தை இயக்கினால் அபராதத் தொகை ரூபாய் 5000 இரண்டாவது முறையும் இப்படியே வேகமாக வாகனத்தை இயக்கினால் அவர்களுடைய ஓட்டுநர் உரிமம் பறிக்கப்படும்.
- பிரிவு 185, மது அருந்திவிட்டு வாகனத்தை அதிவேகமாக ஓட்டுதலுக்கான அபராதத் தொகை ரூபாய் 10,000/- மேலும் ஓட்டுநர் உரிமம் முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- பிரிவு 189, சாலையில் வேகமாக இரண்டு சக்கர வாகனம் அல்லது நான்கு சக்கர வாகனத்தில் பந்தயத்தில் ஈடுபடுதலுக்கான அபராதத் தொகை ரூபாய் 5000.
- பிரிவு 192 A, அனுமதி இல்லாமல் வாகனம் ஓட்டுதலுக்கான அபராதத் தொகை அதிகபட்சம் ரூபாய் 10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
- பிரிவு 193, முகவர்கள் உரிமம் தொடர்பான விதிமீறல்கள் புதிய அபராத தொகையாக ரூபாய் 25,000 முதல் 1,00,000/- ரூபாய் வரை உயர்தப்பட்டுள்ளது.
- பிரிவின் 194, வாகனங்களில் அதிக அளவில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக சுமை ஏற்றுதலுக்கான அபராதத் தொகையாக ரூபாய் 20,000 மற்றும் ரூபாய் 2000 ஒவ்வொரு கூடுதல் டன் எடைக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
- பிரிவின் 194, அதிக அளவில் பயணிகளை ஏற்றுதல் விதிமுறைகளை மீறுதல் புதிய அபராதத் தொகையாக ரூபாய் 1000 கூடுதல் பயணிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 194 B, சீட்பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராத தொகையாக ரூபாய் 1000 விதிக்கப்பட்டுள்ளது.
- பிரிவு 194 C, இருசக்கர வாகனத்தில் அதிக அளவில் அமர்ந்து செல்லுதல் அபராதத் தொகையாக ரூபாய் 2000 மும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதி இழப்பும் செய்யப்படும்.
- பிரிவின் 194 D, இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்லுதலுக்கான அபராதத் தொகையாக ரூபாய் 1000 ஓட்டுனர் உரிமம் மூன்று மாதங்களுக்கு தகுதியிழப்பும் செய்யப்படும்.
- பிரிவின் 194 E, அவசர ஊர்தி மற்றும் அவசர சேவை வாகனங்களுக்கு வழிவிடாமல் செய்தால் அபராத தொகையாக ரூபாய்10000/-
- பிரிவு 196, காப்பீடு இல்லாமல் வாகனத்தை இயக்குதலுக்கான அபராத தொகையாக ரூபாய் 2000.
- பிரிவு 199, சிறு குழந்தைகள் அல்லது சிறார்கள் புரியும் போக்குவரத்து விதிமீறல்களை காப்பாளர்கள் அல்லது வாகன உரிமையாளர் குற்றவாளியாகக் கருதப்படுவார்கள். ரூபாய் 25 ஆயிரம் அபராதம் மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் (Juvenile Justice act) படி நடவடிக்கை வாகனத்தின் பதிவு முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- பிரிவு 206, முழு ஆவணங்களையும் பறிமுதல் செய்ய போக்குவரத்து அதிகாரிகளுக்கு முழு அதிகாரம் உள்ளது.
மேற்கண்ட வாகனப் போக்குவரத்துச் சட்டங்களை அறிந்து அவற்றை முறையாக பின்பற்றி நிலவி வரும் வாகனப் போக்குவரத்து விபத்துகளைத் தவிர்ப்போம்.