Tuesday, December 5, 2023
Homeஆன்மிகம்சூரிய கிரகணம் பற்றிய புராண கதைகள் 

சூரிய கிரகணம் பற்றிய புராண கதைகள் 

 • சூரிய கிரகணம் வானில் நிகழும் அதிசய நிகழ்வு. ஜோதிட ரீதியாக கிரகணங்கள் பற்றி ராகு கேது உடன் இணைந்து புராண கதைகள் கூறப்படுகின்றன.
 • முழு அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நிகழும். எல்லா அமாவாசை நாளிலும் சூரிய கிரகணம் ஏற்படாது.
 • சூரியன் – சந்திரன், பூமி ஒரே நேர்கோட்டில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதில் கிரகண நேரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு கிரகண தோஷம் ஏற்படுகிறது என்பது, பொதுவான ஜோதிட கணிப்பாக இருக்கிறது.
 • அதாவது, சூரியன்-சந்திரன் இரண்டிலிருந்தும் வெளிச்சம் வராமல், ராகு அல்லது கேது மறைப்பதையே கிரகணம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
 • ராகு மறைக்கும்போது ராகு க்ரஷ்தம் என்றும், கேது மறைக்கும்போது கேது க்ரஷ்தம் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன. பொதுவாக கிரகண தோஷம் கெடு பலன்களைத் தான் தரும் என்பார்கள்.
 • சூரிய கிரகண தோஷம்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் சொல்வதுண்டு.
 • கிரகணத்தின் போது சூரியனின் ஒளிக்கதிர்கள் பூமி மீது பதியாமல் தடைபடுகிற பொழுது, இயற்கையில் சில மாற்றங்கள் தானாகவே நிகழ்ந்துவிடுகின்றன.
 • இதில், நல்லதை விட கெடுதலே அதிகம் நடக்கிறது. சூரிய கிரகணத்தை நேரடியாக காணக்கூடாது.
 • சமயல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது. தண்ணீர் அருந்தக்கூடாது. நகம் கிள்ளக் கூடாது. எந்த வேலையும் செய்யக்கூடாது என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது.
 • ராகு கேது கிரகங்கள் சூரியனை விழுங்குவதாகவும் புராண கதைகளில் கூறப்பட்டுள்ளது.
 • மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர்.
 • இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றனர்.
 • சூரியன், சந்திரனை பழிவாங்க ராகுவும் கேதுவும் பிரம்மனை நினைத்து பல காலம் தவமிருந்து வரம் பெற்றனர்.
 • இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வை பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார் எனவும் இதுவே கிரகணம் எனப்படுவதாகவும் புராண கதைகள் கூறுகின்றன.
 • அமிர்தம் பருகினால் அதிக பலமும் மரணமில்லா பெருவாழ்வும் வாழலாம் என்பதை உணர்ந்த தேவர்கள் பாற்கடலை கடைந்தனர்.
 • மலையை மத்தாக்கி வாசுகி பாம்பை கயிறாக்கி தேவர்களும் அசுரர்களும் இணைந்து பாற்கடலைக் கடைந்த போது அமிர்தம் வெளிப்பட்டது.
 • அதனை தேவர்களும் அசுரர்களும் சரிபாதியாக பங்கிட்டுக் கொள்ளுவது என்பதே ஒப்பந்தம்.
 • அசுரர்களும் அமிர்தத்தை பருகினால் அவர்களை சமாளிப்பது கஷ்டம் என்பதை உணர்ந்த தேவர்கள் விஷ்ணுவிடம் முறையிட்டனர்.
 • அசுரர்களுக்கு அமிர்தம் கிடைப்பதை தடுக்க நினைத்த மகா விஷ்ணு மோகினி வடிவம் எடுத்து வந்தார். அமிர்தகலசம் தன்வந்திரியின் கையில் இருந்தது.
 • அதனை மோகினி வாங்கிக் கொண்டாள். அவளது அழகில் மயங்கிய அசுரர்கள் மோகினியே அனைவருக்கும் பரிமாறட்டும் என கூறிவிட்டனர். தேவர்களும் ஒப்புக் கொண்டனர்.
 • யாருக்கு முதலில் அமிர்தத்தை தருவது என்ற பிரச்சினை எழுந்தது. மேலே தெளிவாக உள்ள நீரை தேவர்களுக்கும் அடியில் கலங்கி இருக்கும் திரவத்தை அசுரர்களுக்கும் கொடுப்பது என்று முடிவாயிற்று. முதலில் தேவர்களுக்கு அமிர்தம் வழங்கப்பட்டது.
 • கஸ்யப மகரிஷியின் மகனான சுவர்பானு மோகினியின் வருகையும் அமிர்தம் பரிமாறுவதிலும் ஏதோ சதி உள்ளது எனவும் சந்தேகப்பட்டான்.
 • எங்கே அமிர்தம் கிடைக்காமல் போய் விடுமோ என அஞ்சி மாறு வேடத்தில் தேவர்கள் வரிசையில் அமர்ந்தான். இதனை சூரியனும், சந்திரனும் பார்த்து விட்டனர்.
 • இதற்குள் மோகினி சுவர்பானுவுக்கு அமிர்தம் அளித்துவிட்டார். அவனும் அவசர அவசரமாக பருகி விட்டான்.
 • சுவர்பானு மாறுவேடத்தில் வந்தது மகாவிஷ்ணுவிற்கு தெரியாதா என்ன தெரிந்தேதான் அமிர்தம் கொடுத்தார். அதுவும் ஒரு காரணத்தோடு தான்.
 • இதை அறியாத சூரியனும் சந்திரனும் உடனே மோகினி இடம் சென்று நடந்தவற்றை கூறவே, மகாவிஷ்ணு கோபத்தோடு தன் கையில் இருந்த அகப்பையால் சுவர்பானுவின் தலையில் ஓங்கி தட்டினார்.
 • தலைவேறு, முண்டம் வேற என இருகூறுகளாயிற்று அமிர்தம் உண்ட காரணத்தால் உயிர் போகவில்லை. ஒப்பந்தத்தை மீறியதால் அசுரர்களுக்கு அமிர்தம் வழங்க முடியாது என மோகினி கூறிவிட்டாள்.
 • அமிர்த கலசத்தை பறிக்க அசுரர்கள் முயல, மோகினி வேகவேகமாக அனைத்தையும் தேவர்களுக்கு அளித்துவிட்டார்.
 • ஏமாற்றம் அடைந்த அசுரர்கள் சுவர்பானுவால் தான் தங்களுக்கு அமிர்தம் கிடைக்கவில்லை என வருந்தி சுவர்பானுவை தங்கள் குலத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டனர்.
 • இரு உடலாக கிடந்தாலும் உடல் இருந்தும் தலை இல்லாமலும், தலை இருந்து உடல் இல்லாமலும் இருந்த ஸ்வர்பானு பிரமனிடம் முறையிட்டார்.
 • மகாவிஷ்ணுவால்தான் இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய இயலும்’ என்று கூறிவிட்டார் பிரம்மன். விஷ்ணுவை வணங்கிய சுவர்பானு பிராயச்சித்தம் செய்யும்படி கேட்டான்.
 • உடனே பாம்பு உடலை கொடுத்து தலையுடன் பொருத்தினார் விஷ்ணு. அதேபோல் பாம்பு தலையை மனித உடலுடன் பொருத்தினார்.
 • மனித தலையும் பாம்பு உடலும் கூடியவன் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கூடியவன் கேது எனவும் அழைக்கப்பட்டனர்.
 • ஆனால் இருவருக்கும் உயிர் ஒன்றுதான். இருவரும் நேர் எதிர் திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கும் படி கூறி அருள் பாலித்தார்.
 • ராகு கேது உருவானவுடன் மஹாவிஷ்ணு இப்பூவுலகில் கிருதாயுகம் நடைபெறுகிறது. இப்போது உங்களுக்கு வேலை இல்லை, நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்க இன்னும் ஒரு யுகம் பொருத்திருக்க வேண்டும் என்றார்.
 • அடுத்த யுகமான திரேதாயுதத்தில் நான் ராமனாக மனிதகுலத்தில் பிறப்பேன். அப்போது உங்கள் சக்தியால் ராகு கோதண்ட மாகவும் (வில்) கேது அம்பாகவும் என்னிடம் வருவீர்கள்.
 • அசுரகுல கடைசி அரசனான ராவணனை கொல்வதற்கு நீங்கள் பயன்படுவீர்கள். அப்போது உங்கள் பாவம் தொலையும் என்றார்.
 • நீங்கள் வித்தியாசம் தெரிவதற்காக மற்ற கிரகங்களைப் போல் இல்லாமல் வானவெளியில் அப்ரதட்சணமாக வலமிருந்து இடமாக சுற்றி வருவீர்கள் என்று வாக்களித்தார் ராமன்.
 • ராகுவும் கேதுவும் தங்களின் இந்த நிலைக்கு காரணமான சூரிய சந்திரர்களை பழிவாங்க பிரம்மனிடம் வரம் கேட்டனர். அந்த வரத்தை பிரம்மன் தர மறுத்தார்.
 • பல காலம் தவம் இருந்து பிரம்மனிடம் வரம் பெற்றனர். இவ்வரத்தின்படி ஒரு ஆண்டில் நான்கு முறை சூரிய சந்திரர்களின் பார்வையில் பூமியில் விழாது தடுக்கும் வரத்தை கொடுத்தார். இதுவே கிரகணம் எனப்படுகிறது.
 • சூரியனையும், சந்திரனையும் பாம்பு விழுங்கும் என்றும் இன்றைக்கும் கதைகள் உலா வருகின்றன. ஆனால் கிரகணங்கள் வானில் தோன்றும் அற்புத நிகழ்வு என்ற அறிவியலாளர்கள் உணர்த்துகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments