Tuesday, June 6, 2023
Homeசினிமாஒரே வரிகளை திரும்ப திரும்ப தன் பாடல் வரிகளில் பயன்படுத்திய நா.‌முத்துக்குமார்

ஒரே வரிகளை திரும்ப திரும்ப தன் பாடல் வரிகளில் பயன்படுத்திய நா.‌முத்துக்குமார்

ஒரே பாடல் வரிகளை திரும்ப திரும்ப தன் பாடல் வரிகளில் பயன்படுத்திய நா.முத்துக்குமார்.

திரைப்பட பாடலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர் கவிஞர் நா.முத்துக்குமார் அவர்கள். பாடலாசிரியர், கவிஞர், எழுத்தாளர், நாவலாசிரியர், என பன்முகம் கொண்ட இவர், 2013 இல் தங்க மீன்கள் படத்தில் வரும் ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடலுக்கும், 2014 இல் சைவம் படத்தில் வரும் அழகே அழகே பாடலுக்கும் சிறந்த பாடல் வரிகளுக்கான தேசிய விருதினை பெற்றார். காதல், சோகம், மகிழ்ச்சி என்று நம் உணர்வுகளோடு கலந்த எளிமையான வரிகளை கொடுப்பதில் வல்லவர் என்றே சொல்லலாம்.

இவருடைய பாடல்களோடு பயணிக்காத மனிதர்களே இருக்க மாட்டார்கள் என்று தான் நாம் சொல்ல வேண்டும். அன்றாடம் நாம் கேட்கின்ற நமக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இவருடைய பாடல்கள் முக்கியமான இடம் பெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.

கவிஞர் நா. முத்துக்குமார் சில பாடல் வரிகளை திரும்பத் திரும்ப வெவ்வேறு பாடல்களில் வெவ்வேறு உணர்வோடு எழுதி இருப்பார். தெரிந்தே தான் இப்படி எழுதினேன் என்று அவரே ஒரு நேர்காணலில் கூறி இருப்பார்.

அப்படியான இரண்டு பாடல் வரிகள் தான் காதல் கொண்டேன் படத்துக்கும் காதல் படத்துக்கும் எழுதியவை. கல்லறை மேலே பூக்கும் பூக்கள் என்ற பாடல் வரிகளை இந்த இரண்டு பட பாடல்களிலுமே பயன்படுத்தியிருப்பார். காதல் கொண்டேன், படத்தில் கல்லறை மேலே பூக்கும் பூக்கள் கூந்தலை போய் தான் சேராதோ என்று கல்லறையில் உள்ள பூக்களை குறைவான சிறப்போடும்அதே கல்லறை மீதுதான் பூக்கும் பூக்கள் என்று வண்ணத்துப்பூச்சிகள் பார்த்திருமா? என்று கல்லறை மீது பூக்கும் பூக்களை பற்றி மிகுந்த சிறப்போடும் எழுதி இருப்பார்.

கடல் தாண்டும் பறவைக்கு வழிகளில் மரங்கள் இல்லை, மழை நின்ற பின்பும் மரம் தூறும், இப்படியான பல வார்த்தைகளை தம் பாடல்களில் அதிகமாக பயன்படுத்தி இருப்பார். இவர் எழுதிய மழை நின்ற பின்பும் மரம் தூறும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப கவிஞர் நா. முத்துக்குமார் மறைந்த பின்னும் என்றும் நம் உணர்வோடு இக்கவிஞனின் கவிதைகள் கலந்திருக்கும்.

RELATED ARTICLES

1 COMMENT

  1. மிக அருமையாக கட்டுரை . என்றும் நா. முத்துக்குமார் ❣❣❣

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments