தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் காய்கறி பயிர்கள் பரப்பு விரிவாக்கம், நீர் ஆதாரத்தை பெருக்கிட தனியார் நிலங்களில் பண்ணைக்குட்டை அமைத்தல், பசுமைக்குடில் அமைத்தல், நிழல் வலைக்கூடம் அமைத்தல், நிலப்போர்வை அமைத்தல், அங்கக வேளாண்மை ஊக்குவித்தல், தேனீ வளர்ப்பு மூலம் மகரந்த சேர்க்கையை ஊக்குவித்தல் மேலும், மிளகாய் உற்பத்தியை அதிகரிக்க மற்றும் ஏற்றுமதியை ஊக்குவிக்க கருவேலமரங்களை அகற்ற ஊக்கத்தொகை, குளிர்சாதன சேமிப்பு கிடங்கு அமைத்தல் மற்றும் கருவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் மானிய விலையில் நிரந்தர பந்தல் அமைத்தல், முருங்கை பரப்பு விரிவாக்கம் போன்ற இனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாடித்தோட்ட தொகுப்பு மற்றும் பழச்செடிகள் தொகுப்பு வழங்குதல், ஊடு பயிர் சாகுபடியை ஊக்குவித்தல், தோட்டக்கலை கருவிகள் மற்றும் உபகரணங்கள் விநியோகம், காளான் வளர்ப்புக்குடில் வழங்குதல்.
பனை மேம்பாட்டு இயக்கத்திட்டத்தின் கீழ் பனை விதைகள் வழங்குதல், பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைத்தல், பனை ஏறும் விவசாயிகளுக்கு உபகரணங்கள் வழங்குதல் போன்ற இனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேற்கண்ட மானிய விலை திட்டங்களை பெறுவதற்கு விவசாயிகள் https://tnhorticulture.tn.gov.in/tnhortnet/login.php என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். இணையதளம் மூலம் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே அனைத்து பலன்களும் வழங்கப்படும். இணைய பதிவு தொடர்பான மேலும் விவரங்களுக்கு அந்தந்த வட்டாரத்தில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்துள்ளார்.