ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் விரைவில் துவங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சீதா ராமம் புகழ் மிருணாள் தாகூர் நடிக்க உள்ளார். சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.
இதற்காக அவர் நீண்ட தலைமுடி, தாடி வளர்த்திருக்கிறார். இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. ராணுவ வீரர் கதையை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்து வருகிறார்.காஷ்மீரில் இந்த படத்தின் ஷூட்டிங் நடை பெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பை முடித்த பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார்.
இதில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்க மிருணாள் தாக்கூரிடம் பேசி வருகிறார்கள். பாலிவுட் நடிகையான மிருணாள், துல்கர் சல்மான் ஜோடியாக சீதா ராமம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இப்போது நானி ஜோடியாக தெலுங்கில் நடித்து வருகிறார். முருகதாஸ் இயக்கும் படம் மூலமாக அவர் தமிழில் அறிமுகம் ஆவார் என கூறப்படுகிறது.