சரத், அயிரா, நரேன், அருவி மதன், இளையான் உள்ளிட்ட பலர் நடிப்பில், ஹரி உத்ரா இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் எண் 6, வாத்தியார் கால்பந்தாட்ட குழு, ஏழை மாணவர் களை ஒன்றினணத்து மாற்று திறனாளி பயிற்சியாளர் ஒருவர் கால் பந்தாட்ட குழு ஒன்றை உருவாக்குகிறார்.
அவர்கள் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், தேசிய அளவிலும் விளையாடுவதற்காக போராடுகிறார். ஆனால் அவர்களுக்கு தகுதி இருந்தும்…
திறமை மறுக்கப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடையும் அந்த இளம் கால் பந்தாட்ட வீரர்கள் எடுக்கும் அதிரடி முடிவுதான் இப்ப டத்தின் திரைக்கதை. நாயகன் சரத் சிறப்பாக நடித்து அசத்துகிறார். நாயகி அயிராஇளமை, அழகும் கலந்த கலவையாக திகழ்கிறார்.
கால் பந்தாட்ட பயிற்சியாளராக நடித்திருக்கும் அருவி மதன் தேர்ந்த நடிப்பை வழங்கி இருக்கிறார். புது முகங்களை வைத்து குறைந்த முதலீட்டில் எடுத்திருக்கும் இயக்குநரின் முயற்சியை நிச்சயம் பாராட்டாலம்.