சூரிய கிரகணம் காரணமாக ராமேசுவரம் திருகோயில் நடை அடைக்கப்படும் என அறிவிப்பு
ராமேசுவரம், வரும் 25 ஆம் தேதி சூரிய கிரகணத்தை முன்னிட்டு, 7மணி நேரம் மட்டும் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்படும் என துணை ஆணையர் செ.மாரியப்பன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அக்டோபர் 25 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) சூரிய கிரகணம் ஏற்படுவதை முன்னிட்டு, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் சாயரட்சை பூஜை முற்கால் 11 மணிக்கு நடத்தப்படும். பிற்பகல் 1 மணிக்கு கோயில்நடை சாத்தப்படும்.பிற்பகல் 4.32 மணிக்கு, அக்னித் தீர்த்தக்கரையில் தீர்த்தவாரி நடைபெற்று சுவாமி வீதியுலா நடைபெறும். பின்னர், மாலை 6.30 மணிக்கு கோயில் நடை திறந்து தொடர்ந்து பூஜைகள் நடைபெறும் அன்றைய தினம் அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் இரவு வரையிலும் மட்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர் எனத் தெரிவித்துள்ளார்.