Thursday, March 28, 2024
Homeதொழில்மாதம் ஒரு லட்சம் சம்பளம் வேண்டுமா!

மாதம் ஒரு லட்சம் சம்பளம் வேண்டுமா!

மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம் இந்த கைத்தொழிலை கற்றுக் கொண்டால்

கைத்தொழிலை கற்றவர்கள் தன்னம்பிக்கை பெற்றவர்கள்

என்னதான் நாம் ஒரு சிறந்த இடத்தில் நல்ல வேலையில் இருந்தாலும் ‘கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்’ என்ற வரிகளுக்கு ஏற்ப கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொண்டோம் என்றால் பிற்காலத்தில் யாரையும் சார்ந்து இல்லாமல், எந்த ஒரு கவலையும் இல்லாமல் இருக்கலாம்.

எந்த தொழில் செய்தாலும் அந்த தொழில் மீது முழு ஈடுபாடு இருந்தால் மட்டுமே அதில் நீங்கள் வெற்றி பெற முடியும்‌. அந்த வகையில் தற்போது சிறந்த வருமானத்தை தரும் ஆரி எம்பிராய்டரி ஒர்க் பற்றி பார்ப்போம்.

ஆரி எம்பிராய்டரி ஒர்க்

பிளவுஸில் நாம் செய்யும் பேட்டர்ன் வேலைப்பாடுகள் ஒரு ஸ்டைல் என்றால், ஆரி வேலைப்பாடுகள், ஸ்டோன் வேலைப்பாடுகள், எம்பிராய்டரி செய்வது போன்றவை எப்போதும் டிரெண்டிலிருக்கும் ஸ்டைல். பிளவுஸில் சிறிய ஆரி டிசைன் செய்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகும். பிளவுஸ் முழுவதுமான ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்த பிளவுஸின் விலை சராசரியாக 20,000 ரூபாய்க்கும் அதிகம்.

சின்ன எம்ராய்டரி தொடங்கி, பெரிய வேலைப்பாடுகள் வரை ஆரி ஊசியில் வடிவமைக்கும் பெரும்பாலான டிசைன்களை சாதாரண ஊசியைப் பயன்படுத்தி செய்து கிராண்டான பிளவுஸ் டிசைன்களை உருவாக்க முடியும். இதற்கான முதலீடும் குறைவு, நுணுக்கமான டிசைன்கள் செய்யக் கற்றுக்கொண்டால், இதை தொழிலாகவும் மாற்ற முடியும்.

இந்த தொழிலுக்கான முதலீடும் உங்களின் நேரமும், ஆரி ஃபிரேமும், ஆரி எம்பிராய்டரி பொருட்கள் வாங்குவதற்கு தேவையான 1500 ரூபாயும்தான். குறைந்தபட்சம் ஒரு பிளவுஸ் எம்பிராய்டரி ஒர்க் செய்ய 2,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம். அதிகபட்சம் ஒரு பிளவுஸ் எம்பிராய்டரி ஒர்க் செய்வதற்கு ஒரு லட்சம் வரை வசூலிக்கலாம். ஒரு நாளைக்குள் ஒரு பிளவுஸை டிசைன் செய்து முடிக்க முடியும்.

இப்பொழுதே கற்றுக் கொள்ளுங்கள்

இனி நீங்களும் ஆரி எம்பிராய்டரி ஒர்க் டிசைன் செய்வதை கற்றுக்கொண்டு மாதம் ஒரு லட்சம் வரை சம்பாதிக்கலாம். இதற்கென அரசு மற்றும் தனியார் பயிற்சி மையங்கள் உள்ளது. அரசு பயிற்சி மையங்களில் இலவசமாகவும், தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தபட்சம் 5000 கட்டணம் செலுத்தியும் படிக்கலாம்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments