மண்பானை – உஷ்ணம் குறைவு
வீட்டில் மிஞ்சிய பழைய சாதத்தை மண்பானையில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவைத்து வேண்டும். பின்னர் காலை சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள உஷ்ணம் குறைந்து உடலை குளிர்ச்சியடையச் செய்கிறது.
பழைய சாதம் – ஊட்டச்சத்து
பழைய சாதத்தில் உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியா உருவாகுகிறது. இதனால் பழைய சாதத்தில் புளிப்பு தன்மையை ஏற்படுகிறது. பாக்டீரியா வளர்ச்சி காரணமாக அந்த தண்ணீரில் ஸ்டார்ச் செரிக்கப்பட்டு வைட்டமின் – பி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அளவு அதிகரிக்கிறது.
குடல் புண் – உடல் ஆரோக்கியம்
வாரத்துக்கு மூன்று முறை பழைய கஞ்சியை குடித்து வந்தால் குடல் புண் வேகமாக ஆறும். சருமத்துக்கு பொலிவையும், அழகையும் தரும். பழைய கஞ்சியில் இரும்புச் சத்து, பொட்டாசியம், கால்சியம் அதிக அளவில் உள்ளது. எனவே, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலின் ஆரோக்கியம் மேம்படும்.
சாப்பிட்ட திருப்தி – உடல் எடை
புதிதாக வடித்த சாதத்தை விட பழைய கஞ்சியில் கார்போஹைட்ரேட் குறைவாக உள்ளது. 60 சதவிகிதம் வரை கலோரி குறைந்து விடுகிறது. அரிசி சாதம் சாப்பிட்ட திருப்தி, உடல் எடையும் குறையும்.
பிரிட்ஜ் – வெப்பநிலை
பழைய கஞ்சியை நாள்கணக்கில் வைத்திருக்க கூடாது. சுமார் 15 மணி நேரத்திற்குள் பழைய கஞ்சியை சாப்பிட வேண்டும். தண்ணீர் ஊற்றிய சாதத்தை எக்காரணம் கொண்டும் பிரிட்ஜில் வைக்கக் கூடாது. ஏனென்றால் அறை வெப்பநிலையில் இருந்தால் தான் பாக்டீரியா உற்பத்தி ஆகும்.
– ரேவதிகவின்.
இதையும் படியுங்கள் || பரமக்குடியில் “சிட்டுக்குருவி ஓவியம்” வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவர்கள்