இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி நகர் எமனேஸ்வரத்தில் கைத்தறித்துறையின் மூலம் 9வது தேசிய கைத்தறி தின நிகழ்ச்சி நடைபெற்றது.
நெசவாளர்களை பெருமைப்படுத்தினர்
இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமையேற்று கைத்தறி கண்காட்சியினை திறந்து வைத்து பார்வையிட்டர். குறிப்பாக எமனேஸ்வரம் என்றால் மக்கள் மத்தியில் கதர் பட்டு என்ற நினைவுதான் வரும்.
அந்த அளவிற்கு கதர் ஆடைகளின் உற்பத்தி நிறைந்த பகுதியாக இந்தப் பகுதி இருந்து வருகிறது. கதர் ஆடையின் பெருமை இராமநாதபுரம் மாவட்டத்திற்கு மிக இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது. என்றால் நெசவாளர்களின் உழைப்பே ஆகும்.
அந்த நெசவாளர்களின் வளர்ச்சிக்கு அரசு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு பொதுமக்களும் தங்கள் பங்களிப்பை வழங்கிடும் வகையில் கைத்தறி ஆடைகளை வாங்கி நெசவாளர்களின் பொருளாதாரத்திற்கு உறுதுணையாக இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தெரிவித்தார்.
சிறப்பு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள்
தொடர்ந்து நெசவாளர்களுக்கான இலவச பொது மருத்துவ முகாமை துவக்கி வைத்து பார்வையிட்டதுடன் இப்பகுதியில் உள்ள சிறியவர் முதல் பெரியவர் வரை நெசவாளர்களின் அனைத்து மக்களின் மருத்துவ முகாமிற்கு வருகை தந்து மருத்துவப்பரிசோதனை மேற்கொண்டு சுகாதாரத்துடன் இருந்திட வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், கேட்டுக்கொண்டார்.
பின்னர் 16 பயனாளிகளுக்கு முத்ரா கடனுதவி திட்டத்தின் மூலம் தலா ரூ.50,000/- வீதம் ரூ.8 இலட்சத்திற்கான கடனுதவிகளையும், மத்திய அரசின் சமர்த் நெசவு பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி முடிந்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும், சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 05 பயனாளிகளுக்கு ரூ.3,11,808/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளையும் மொத்தம் 21 பயனாளிகளுக்கு ரூ.11,11,808.00/- மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்
இந்நிகழ்ச்சியில் கைத்தறி துறை உதவி இயக்குநர் ரெகுநாத் , பொதுசுகாதாரத்துறை துணை இயக்குநர் இந்திரா , பரமக்குடி நகர் மன்றத்தலைவர் சேது கருணாநிதி , மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் ஜீவரத்தினம் , மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கார்த்திகேயன் , நெசவாளர் கூட்டுறவு சங்க (பெடரேஷசன்) சங்கத்தலைவர் சேஷய்யன் , செயலாளர் ருக்மாங்கதன் , கைத்தறித்துறை ஆய்வாளர் ரத்தின பாண்டியன் , கைத்தறி கண்காணிப்பு அலுவலர் லெட்சுமி வெங்கட சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.