இராமநாதபுரம் வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாணவ நல அமைப்பு சங்கம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயணசர்மா, தலைமையேற்று பெருந்தலைவர் காமராஜர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அரசு பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான (CHILD HOUSE) மாணவ நல அமைப்பு சங்கம் துவக்கி வைத்து 4 வண்ணகலர்களில் பிரிக்கப்பட்ட அணிகளுக்கு அடையாளம் குறித்த வண்ணக்கொடியினை அறிமுகப்படுத்தி மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் சிறப்பாக செயல்பட்டு பயன்பெற வேண்டும் என தெரிவித்தார். இராமநாதபுரம் மாவட்டம் கல்வியின் வளர்ச்சி சிறந்த முன்னேற்றத்தில் உள்ளன. மேலும் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வியுடன் சேர்த்து விருப்பமான போட்டிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் ஆர்வத்திறனை கண்டறிந்து அதற்கேற்ப வழிகாட்டும் வகையில் இத்தகைய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தை பொருத்தவரை மாணவர்களின் கல்வித்திறனை மேம்படுத்துதல், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களின் விருப்பமுள்ள விளையாட்டில் ஆர்வம் காட்டச் செய்தல், அதேபோல் கலை இலக்கியப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அதில் ஆர்வத்தை மேம்படுத்துதல் என பல்வேறு வகைகளில் மாணவ, மாணவிகளின் திறமையை மேம்படுத்தும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாணவ, மாணவிகளுக்கான ஓர் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கி அதில் அவர்களின் அறிவுத்திறன் மேம்பாடு பெறும் வகையில் இதன் பணிகள் இருக்கும்.
மாவட்டத்தில் 293 அரசு பள்ளிகளிலும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு பள்ளியிலும் 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு முறையே அந்தந்த வகுப்புகளில் MAROON, PINK, PURPLE, BROWN போன்ற வண்ணத்தில் எளிதில் அறியும் வண்ணம் குழுவாக பிரித்து அந்த மாணவ, மாணவிகளின் செயல்பாடு குறித்து கண்காணிக்கப்படும். குறிப்பாக ஒவ்வொரு நாளும் மாணவ, மாணவிகளின் வருகை, வகுப்பறையில் பாடங்கள் கவனிக்கும் முறை, சீருடை மற்றும் காலணி முறையாக அணிந்து வருதல், வகுப்பறை மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்தல், வகுப்பில் நடைபெறும் தேர்வில் பெறப்படும் மதிப்பெண் உட்பட அனைத்தையும் கவனித்து அதற்கு மதிப்பெண்கள் அந்த குழுக்களுக்கு வழங்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் கணக்கீடு செய்து ஒவ்வொரு பள்ளியிலும் எந்தக்குழு சிறப்பாக செயல்பட்டு அதிக மதிப்பெண்பெற்று உள்ளதை கண்டறிந்து அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படும். ஆண்டின் நிறைவில் எந்த குழு முதன்மை பெற்றுள்ளது என்பதை கண்டறிந்து அந்த பள்ளிக்கு பாராட்டு சான்று வழங்கப்படும்.பொதுவாக இந்த மாணவ நல அமைப்பின் நோக்கம். ஒவ்வொரு மாணவ, மாணவியும் எந்த வகையில் திறமைசாலிகள் என்பதை கண்டறிந்து அவர்களுக்கு மேலும் திறமையை மேம்படுத்த இத்திட்ட உறுதுணையாக இருக்கும். குறிப்பாக படிப்பில் ஆர்வமுடன் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எந்த பாடத்திட்டம் மிகவும் பிடித்தது என்பதை கண்டறிந்து அதை ஊக்கப்படுத்துதல் சிலர் விளையாட்டிலும், சிலர் கலை இலக்கியப் போட்டிகளிலும் ஆர்வமுடன் இருப்பார்கள். அதில் அவர்களை மேம்படுத்துதல், சிலர் பாடங்களில் குறைந்த மதிப்பெண் பெற்று மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பார்கள் அவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு கவனம் எடுத்து கூடுதல் வகுப்புகள் நடத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாணவ, மாணவிகளின் செயலை கண்டுணர்ந்து அவர்களின் மனநிலைக்கேற்ப ஆசிரியர்கள் உறுதுணையாக இருந்திட வேண்டும். என்ற அடிப்படையில் CHII.D என்னும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. குழந்தை என்ற சொல் எல்லோராலும் கவர்ந்த சொல் என்பதால் அந்த பெயரில் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களுக்கு இத்திட்டத்தின் பயன்கள் குறித்து எடுத்துச்சொல்லி நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் அந்த மாணவ, மாணவிகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். இத்திட்டத்தை சிறப்புடன் செயல்படுத்தி வரும் கல்வியாண்டில் 10ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100% தேர்ச்சியை பெற்று தர வேண்டுமென உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, தெரிவித்தார்.
தொடர்ந்து பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 121-வது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, பரிசு வழங்கி சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் இராமநாதபுரம் நகர்மன்ற தலைவர் கார்மேகம், முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, முகவை சங்கமம் செயலாளர் வான்தமிழ் இளம் பரிதி , மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர், வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் வேணி , உதவி தலைமை ஆசிரியர் ரங்கநாயகி மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.