இராமநாதபுரம் மாவட்டம் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி கடலாடி வட்டம், டி.மாரியூர் ஊராட்சியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாமை துவக்கி வைத்து 3,500 பேர் மருத்துவப்பரிசோதனை செய்து பயன் பெற்றுள்ளார்கள் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன், தலைமை வகித்தார்.
தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை
நமது மாவட்டத்தில் மண்டபம் மற்றும் எஸ்.மாரியூர் இரண்டு இடங்களில் இன்று இந்த மருத்துவ முகாம் நடைபெறுகிறது. கலைஞர் திட்டங்கள் ஒவ்வொன்றும் வரலாற்று சிறப்புமிக்க திட்டங்களாக உள்ளது.
அந்த வகையில் இந்த மருத்துவ முகாமின் நோக்கம். கிராம பகுதியில் உள்ள அனைத்து மக்களும் ஆரோக்கியமுடன் இருந்திடும் வகையில் அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் செய்து தலைசிறந்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிடும் வகையில் இம்முகாம் செயல்படுகிறது. முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது பொதுமக்களின் உடல்ஆரோக்கியத்தை பாதுகாத்திட இலவச மருத்துவ முகாம் திட்டம் துவக்கி கிராமம் முதல் நகர் பகுதி வரை அனைத்து இடங்களிலும் சிறந்த மருத்துவ வல்லுனர்களின் குழு மூலம் மருத்துவப்பரிசோதனை மற்றும் மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு இணையாக அரசு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டது.
கிராம பகுதியில் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை
தமிழ்நாடு முதலமைச்சர்
ஆட்சிப் பொறுப்பேற்றதும் “மக்களைத்தேடி மருத்துவம்” என்னும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
கிராம பகுதிகளில் தொடர் சிகிச்சைக்கான மருந்து, மாத்திரைகள் சாப்பிட கூடியவர்கள் ஒழுங்காக மருந்து மாத்திரை சாப்பிடாதவர்களை கண்டறிந்து அவர்களை பாதுகாத்திடும் வகையில் இத்தகைய திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்கு தேவையான மருந்து மாத்திரைகளை அவர்கள் இல்லத்திற்கே தேடிச்சென்று வழங்கப்பட்டு வருவதுடன், மேலும் இரத்த அழுத்த பரிசோதனை, சக்கரை அளவு பரிசோதனை போன்றவை பரிசோதிக்கப்பட்டு அதற்கான மருந்து, மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.
இத்தகைய திட்டம் பொதுமக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமின்றி காப்பீடு திட்டத்திற்கான அட்டை பெறாதவர்கள் ஆதார் அட்டையை கொண்டு வந்து இந்த முகாமில் காப்பீடு அட்டை பெற்று பயன்பெறலாம் என மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உறுப்பினர்கள்
இந்நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மற்றும் கதர் கிராம தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல்,சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் இந்திரா , ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் (பொ) அபிதா ஹனிப் , காசநோய் பிரிவு துணை இயக்குநர் சிவானந்தவல்லி , வட்டார மருத்துவ அலுவலர் சரவணன் , மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் வேலுச்சாமி , பூச்சியல் மருத்துவ அலுவலர் ரமேஷ் , கண்காணிப்பு அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் , சிராஸ் துதின் , விஜி பிரியா , சேக் அப்துல்லா , பூமிநாதன் , மருத்துவ ஒருங்கிணைப்பாளர் திலிப்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.