Tuesday, October 3, 2023
Homeசெய்திகள்முன்பணம் கொடுத்து ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

முன்பணம் கொடுத்து ஆன்லைன் மோசடி சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

சைபர் கிரைம் குற்றவாளிகள் முன் பணம் கொடுத்து மோசடி செய்யும் புதிய வகை யுக்தியை கையாண்டு வருவதால், கவனமாக இருக்க வேண்டும்’ என, சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

சைபர் கிரைம் எச்சரிக்கை

இணைய வழியாக பண மோசடி செய்து வரும், சைபர் கிரைம் குற்றவாளிகள் தற்போது, புதிய வகை யுக்தி ஒன்றை கையாண்டு வருகின்றனர். உங்கள் மொபைல் போன் எண்ணிற்கு, குறுஞ்செய்தி அல்லது ‘வாட்ஸாப்’பிற்கு, ‘லிங்க்’ உடன் தகவல் அனுப்புவர். அதில், ‘நீங்கள் வேலை தேடும் நபர் என்பதை அறிகிறோம். எங்கள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ளது. ‘அதில் உங்களுக்கு பணிபுரிய விருப்பமா. வீட்டில் இருந்தபடியே, தினமும், 15,000 – 40,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம்’ என, தெரிவிக்கப்பட்டு இருக்கும்.

30 சதவீதம் கமிஷன்

அந்த,’லிங்க்’ஐ தொட்டால், ‘டெலிகிராம்’ செயலியில் உள்ள குழுவில் நீங்கள் இணைக்கப்படுவீர்கள். அதில், ‘எங்கள் நிறுவனத்தில் இணைந்தமைக்கு நன்றி. நாங்கள், 15 வகையான, மிகவும் எளிதான, ‘டாஸ்க்’களை தருவோம். அதில் வெற்றி பெற்றால், 30 சதவீதம் கமிஷன் தொகை தரப்படும். ‘முன் பணமாக, 100 – 500 வரை உங்கள் வங்கி கணக்கிற்கு அனுப்புவோம். அதற்காக, உங்கள் வங்கி கணக்கு, ஐ.எப்.எஸ்.சி., கோட் உள்ளிட்ட விபரங்களை அனுப்புங்கள்’ என, கேட்பர்.

முன்பணம் கொடுத்து மோசடி

அவர்கள் தரும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தால், அவர்களின் நிறுவனத்தில், உங்களுக்கு தனியாக கணக்கு துவங்கப்பட்டு இருப்பது போல, ‘டிஸ்பிளே’ செய்வர். அதில், நீங்கள் சம்பாதித்த தொகையை பார்த்துக் கொள்ளலாம். அவர்கள் அனுப்பிய முன் பண தொகையில் இருந்து நீங்கள், ‘டாஸ்க்’கை வெல்லும் முயற்சியில் ஈடுபடலாம். பின், 1,000 ரூபாய் செலுத்துங்கள், கமிஷன் தொகையுடன் உங்கள் கணக்கில் வர வைக்கப்படும் என, கூறுவர். அதற்கான கமிஷன் தொகையும் உங்கள் வங்கி கணக்கிற்கு செலுத்துவர்.

புகார் தெரிவிக்க: 1930

இப்படி முன் பணம் கொடுத்தும், கமிஷன் தொகையை தந்துவிடுவது போல நம்பிக்கையை ஏற்படுத்தி, 15வது டாஸ்க் வருவதற்குள், உங்களிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வரை சுருட்டி விட்டு, தொடர்பை துண்டித்து விடுவர். இந்த மோசடி, பெண்கள் மற்றும் வேலை தேடுவோரை குறி வைத்து அதிகளவில் நடக்கிறது. மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பண மோசடி குறித்து உடனடியாக, 1930 என்ற எண்ணிற்கு, புகார் அளிக்க வேண்டும்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments