இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி தாலுகா போகலூர் ஒன்றியம் சேமனூர் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய நியாய விலை கடையை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பரமக்குடி எம்.எல்.ஏ முருகேசன் திறந்து வைத்தார். உடன் போகலூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கதிரவன், போகலூர் ஒன்றிய துணைத் தலைவர் பூமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் பதக்காதவதிகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.