Tuesday, December 5, 2023
Homeராமநாதபுரம்பரமக்குடி அருகே இயற்கை விவசாய கருத்தரங்கம்

பரமக்குடி அருகே இயற்கை விவசாய கருத்தரங்கம்

பரமக்குடி அருகே உள்ள இளமனூரில் பெனிட்ரான்  நிறுவனம் மற்றும் பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை இணைந்து நஞ்சில்லா உணவு உற்பத்தி, வளம் குன்றா இயற்கை விவசாய  கருத்தரங்கம் சுமார் 12 கிராமங்களை சேர்ந்த 500க்கு மேற்பட்ட விவசாயிகளை ஒன்றிணைத்து இளமனூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு இளமனூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்திசத்தியேந்திரன் தலைமை தாங்கினார். இளமனூர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். அர்ச்சுனன் அனைவரையும் வரவேற்று பேசினார்.

பெனிட்ரான்  நிறுவனத்தின் மூத்த  ஆலோசகர் டாக்டர் முருகேசன் கலந்து கொண்டு பேசியதாவது,

“மண்வளம்,  நுண்ணுயிர் உரங்கள், நீர் மேலாண்மை, விதை நேர்த்தி,  மண்வளம் காத்தல், நீர் மேலாண்மை, இயற்கை உணவு சங்கிலி காப்பாற்றுதல், திடக்கழிவு மேம்பாடு, விவசாய கழிவுகள், மனிதக் கழிவுகளை நுண்ணுயிர் பயன்படுத்தி விவசாயத்தில் மறுசுழற்சி செய்து இடுப்பொருட்களை வீணாக்காமல் விவசாய உற்பத்திகளை நிலைப்படுத்துவது, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு, நஞ்சு இல்லா உணவு உற்பத்தி, வளம் குன்றா விவசாயத்திற்கும் அதிக ஊட்டச்சத்து நோய் எதிர்ப்பு அதிகம் உள்ள உணவு உற்பத்திக்கும் பெனிட்ரான் நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் நஞ்சு இல்லா விவசாயத்திற்கு பயன்படும் உயிர் உரங்கள், விவசாயக் கழிவுகளை குறுகிய காலத்தில் உரமாக மாற்றும் நுண்ணுயிர்களை பற்றியும் அதன் மூலம் உற்பத்தி செய்யும் பொருட்கள் அதன் பயன்பாடுகளை பற்றி துல்லியமாகவும் தெளிவாகவும் விவசாய மக்களுக்கு விளக்கம் அளித்தனர்.

மேலும் பெனிட்ரான் நிறுவனத்தின் விற்பனை மேலாளர் சரவணன் பெனிட்ரான் நிறுவனத்திற்கும் விவசாயிகளுக்கும் உள்ள தொடர்பு பற்றி விளக்கி பேசினார். நிறுவனத்தின் சார்பில் விவசாயிகளுக்கு டி.சர்ட், தொப்பி வழங்கப்பட்டது. பெண்கள் மேம்பாட்டு அறக்கட்டளை இயக்குனர் செல்வி நன்றி கூறினார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments