சிகே பிர்லா குழுமத்தின் ‘ஓரியண்ட் சிமென்ட்’ பங்குகளை வாங்கும் பணியில் ஜேஎஸ்டபிள்யூ சிமென்ட் நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதானி மற்றும் ஆதித்யா பிர்லா குழுக்கள் தென்னிந்திய சிமெண்ட் நிறுவனங்களில் கவனம் செலுத்திய பிறகு, JSW குழுமமும் களத்தில் இறங்குகிறது. முதற்கட்டமாக ஓரியண்ட் சிமென்ட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கும் முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. சந்தையில் தனது நிலையை வலுப்படுத்த இது ஒரு வாய்ப்பாக பார்க்கிறது. மேலும், இந்தப் பங்குகளை வாங்கிய பிறகு, வரும் 2025-ஆம் ஆண்டு பங்குச் சந்தையில் தனது சிமென்ட் வணிகத்தைப் பட்டியலிட திட்டமிட்டுள்ளது.