Tuesday, June 6, 2023
Homeசெய்திகள்முதுகுளத்தூரில் தண்ணீரில் கிடக்கும் நெல் மூட்டைகள்

முதுகுளத்தூரில் தண்ணீரில் கிடக்கும் நெல் மூட்டைகள்

முதுகுளத்தூரில் தண்ணீரில் கிடக்கும் நெல் மூட்டைகள்

மழைநீரில் – நெல் மூட்டைகள்

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட அரசு நேரடி கொள்முதல் குடோனில் கடந்த 3 நாட்களாக பெய்த மழையில் சுமார் 5,000 நெல் மூட்டைகள் தண்ணீரில் மிதக்கிறது.

போதிய இடவசதி – கவலை

இதனால் அப்பகுதியில் உள்ள விவசாயிகள் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த முடியாமல் கவலையுடன் உள்ளனர். அதுமட்டுமின்றி அரசின் நேரடி கொள்முதல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நெல் மூட்டைகளுக்கு போதிய இடவசதி இல்லாமல் வெளியில் உள்ள காலியிடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் – வேதனை

இதனால் மேலும் முதுகுளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் புதிதாக நெல் சேமிப்பு கிடங்கு அமைத்து தர வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றனர். அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அரசு நேரடி கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்த நெல் மூட்டைகளுக்கு இன்றுவரை விவசாயிகள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல் உள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments