பார்த்திபனூர் அரசு பள்ளியில் ஓவியப்போட்டி.
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி நடைபெற்றது வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அரசு பள்ளிகள் மேம்பட ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்,அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகப்படுத்தும் விதமாக மாணவ மாணவிகளுக்கு ஓவிய போட்டி சென்னை ஸ்போர்ட்டானா அகடமி சார்பாக நடைபெற்றது.பள்ளியின் தலைமை ஆசிரியை அரசம்மாள் தலைமை வகித்தார். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மேல பார்த்திபனூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகவேல், பரிசுகளை வழங்கினார்.
ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
பரமக்குடி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேவதர்ஷினி, சுகாதார வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், நெல்மடூர் ஊராட்சிமன்ற மன்ற தலைவர் சுகன்யா சதிஷ், பார்த்திபனூர் காவல் துறை ஆய்வாளர் சுதா, ஒருங்கிணைப்பாளர் மாரிமுத்து, பள்ளி ஆசிரியர்கள், வார்டு உறுப்பினர்கள்,சமூக ஆர்வலர்கள் பள்ளி ஆசிரியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் மாலா சிவானந்தம், நன்றி கூறினார் .