பார்த்திபனூர் அரசு பள்ளியில் குழந்தைகள் தினத்தையொட்டி ஓவியப் போட்டி
பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகள் தினத்தையொட்டி ஓவியப்போட்டி நடைபெற்றது.
ஆன்லைன் ஓவிய போட்டிகள் நடைபெற்றது
கிராமப்புற மாணவர்கள் கலை மற்றும் தனித்திறமைகளை வளர்க்கும் விதமாக அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் ஓவியப் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து குழந்தைகள் தினத்தையொட்டி பரமக்குடி அருகே உள்ள பார்த்திபனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு சென்னை ஸ்போர்ட் அகாடமி சார்பாக ஆன்லைன் ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு
தலைமை ஆசிரியர் அரசம்மாள் தலைமை வகித்தார். போட்டியில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் 50 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. போட்டியின் ஒருங்கிணைப்பாளர் மாலா, சிவானந்தம் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.