இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியம் சிக்கல் கிராம பஞ்சாயத்தும் உட்பட்ட ஆண்டிச்சிகுளம், பொட்டல் பச்சேரி, தொட்டியபட்டி கழிநீர் மங்கலம். மதினாநகர், காந்தி நகர் என ஆறு கிராமங்கள் உள்ளது.
கடிதத்தில் கூறியிருப்பது
இராமநாதபுரம், சிக்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மாருல் அமீஸ், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த ராஜினாமா கடிதத்தில் கூறியிருப்பதாவது.நான் ஊராட்சி மன்றத்தின் துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வருகிறேன். நான் 6வது வாாடு பொதுமக்கனால் ஊராட்சி மன்றத்திற்கு தேர்த்தெடுக்கப்பட்டேன்.
காவேரி கூட்டு குடிநீர் திட்ட இணைப்புகள் கேட்டு பலமுறை ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய அலுவலக நிர்வாகம், காவேரி கூட்டு குடிநீர் அதிகாரிகள் பலரிடத்தில் குடிநீர் இணைப்பு வேண்டி கேட்டிருக்கிறேன்.
யாரும் செவி சாய்க்கவில்லை. தற்போது வறட்சி உச்சகட்டத்தில் இருக்கிறது. பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் நீண்ட நெடிய தூரம் காலி குடங்களுடன் அழைக்கின்ற காட்சி எங்கள் பகுதியில் நீடிக்கிறது.கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக தெரு குழாய்களில் தண்ணீர் வருவதில்லை. எல்லா அதிகாரிகளையும் சந்தித்து மனு கொடுத்தும் எவ்வித பலனும் இல்லை.ஆகவே மக்களுக்கு சேவை செய்ய முடியாததால் ஊராட்சி மன்ற துணை தலைவர் பதவியையும், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவியையும் என் மனசாட்சியின் படி நான் ராஜினாமா செய்கிறேன்.
மாவட்ட ஆட்சியருக்கு கடிதம்
மாவட்ட ஆட்சியர் முறையான விசாரணை செய்து அனைத்து மக்களுக்கும் முறையான குடிநீர் கிடைத்திட நடவடிக்கை எடுக்குமாறும் தங்களை இந்த கடிதத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறேன். மேற்கண்டவாறு சிக்கல் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நூருல் அமீன் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இவரோடு சேர்ந்து மொத்தமுள்ள 12 வார்டு உறுப்பினர்களும் தங்கள் ராஜினாமா கடிதங்களை ஆட்சியர் விஷ்ணு சந்திரனிடம் நேரடியாக வழங்கினர்.ஊராட்சி மன்ற துணைத் தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்வது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.