சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்கள் போராட்டம்
சிவகங்கை ஒன்றியம் தமறாக்கி தெற்கு ஊராட்சிச் செயலாளர் மருதமுத்துவுக்கு 2021 ஜூன் முதல் மாத ஊதியமாக ரூ.10 ஆயிரம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. அவருக்கு முறைப்படி அரசு நிர்ணயித்த ஊதியம் வழங்க வலியுறுத்தி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதையடுத்து தமிழ்நாடு ஊராட்சிச் செயலாளர் சங்கத்தினர் சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் நேற்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநிலத் தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ், மாவட்டத் தலைவர் பாக்கியராஜ், செயலாளர் ஜெயபாண்டியன், பொருளாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைத்துப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சார்லஸ் ரெங்கசாமி பேசினார். அதைத் தொடர்ந்து, அதிகாரிகள் நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை.