Saturday, November 9, 2024
Homeவிளையாட்டுசாதிப்பாரா பாண்ட்யா: வங்கதேச 'டி-20' தொடரில்

சாதிப்பாரா பாண்ட்யா: வங்கதேச ‘டி-20’ தொடரில்

புதுடில்லி: வங்கதேசத்துக்கு எதிரான ‘டி-20’ தொடரில் இந்தியாவின் ஹர்திக் பாண்ட்யா சாதனை படைக்க காத்திருக்கிறார்.

இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் மூன்று ‘டி20’ போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டெஸ்ட் தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது. ‘டி20’ தொடரின் முதல் போட்டி குவாலியரில் நாளை நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் டெல்லி (அக். 9) மற்றும் ஹைதராபாத் (அக். 12) ஆகிய இடங்களில் நடைபெறும்.

இந்த தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா சேர்க்கப்பட்டுள்ளார். அவரது ‘வேகம்’ காரணமாக இரண்டு சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது.

சர்வதேச ‘டி20’ போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் புவனேஷ்வர் குமார் (90 விக்கெட்), ஹர்திக் பாண்டியா (86) ஆகியோர் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். வங்கதேச தொடரில் பாண்டியா மேலும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால், புவனேஷ்வர் குமாரை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடிக்கலாம்.இத்தொடரில் பாண்ட்யா 11 விக்கெட் வீழ்த்தினால், ‘டி-20’யில் அதிக விக்கெட் சாய்த்த இந்திய பவுலராகலாம். முதலிடத்தில் சகால் (96 விக்கெட்) உள்ளார்.

இது தவிர, இந்தியா – வங்கதேசம் இடையேயான டி20 போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை இந்தியாவின் சகால் (9 விக்கெட்) பெற்றுள்ளார். பாண்டியா (6 விக்கெட்) அஸ்வினுடன் 7வது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். பாண்டியா இன்னும் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினால் இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடிக்கலாம்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments