Friday, September 22, 2023
Homeதொழில்பாரம்பரியம் காக்கும் பரமக்குடி நெசவாளர்கள்

பாரம்பரியம் காக்கும் பரமக்குடி நெசவாளர்கள்

“பாரம்பரியம் காக்கும் பரமக்குடி நெசவாளர்கள்”

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் சுமார் 8000 குடும்பத்துக்கு மேல் வசித்துவரும் சவுராஷ்ட்ரா சமூக மக்கள் குலத்தொழிலாக கைத்தறி பட்டு நெசவு செய்து வருகிறார்கள்.

பரமக்குடி – எமனேஸ்வரம் பகுதியில் சொந்த கைத்தறியில் நெய்யப்படும் பம்பர் பட்டு சேலைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.திருமணம், பண்டிகை மற்றும் விழாக்களுக்கு பரமக்குடி பம்பர் பட்டுக்கு தனி மவுசு என்றே சொல்லலாம்.

ஆந்திராவில் குடியேற்றம்

சவுராஷ்ட்ரா சமூக மக்கள் செல்வாக்குடனும், ஆச்சார அனுஷ்டானங்களுடனும் வாழ்ந்த சமூகம். ஏறத்தாழ 900 ஆண்டுகளுக்கு முன்பே கஜினிமுகம்மதுவின் படையெடுப்பால் சின்னாபின்னமாக்கப்பட்டு, பல கொடுமைகளுக்கும் ஆனாலும் பணியாத  இச்சமூகத்தினர் தென்திசை நோக்கி புறப்படலாயினர்.

மராட்டிய மாநிலத்தில் சுமார் 300 ஆண்டுகாலம் வாழ்ந்தபிறகு 1,312 ல் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயர் அழைப்பை ஏற்று ஆந்திராவில் குடியேறினர். தமிழ்நாட்டில் குடியேற்றம் தஞ்சை மாராட்டிய மன்னர், மதுரையை ஆண்ட மன்னர், ராமநாதபுரம் சேதுபதி மன்னர்கள் பட்டு ஆடைகள் நெசவு உற்பத்தி செய்வதை பார்த்து வியந்தனர். அதனால் தான் அம்மன்னர்கள் தமிழகத்துக்கு அழைத்து வந்தனர் எனக் கூறு கின்றனர்.

பரமக்குடியில்(பிரம்புக்காடு) குடியேற்றம்

ஒரு சமயம் சௌராஷ்ட்ரா மக்களில் ஒரு பகுதியினர் ராமேசுவரத்துக்கு பாத யாத்திரையாக வந்து கொண்டிருந்தபோது, வைகை நதிக்கரையோரம் வரும்போது ஒரு பெண்மணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதன் காரணமாக பிரம்புக்காடு (பரமக்குடி) என்ற இடத்தில் தங்கி இருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சேதுபதி மன்னர் இம்மக்களின் பாஷை மற்றும் வாழ்க்கைமுறை புதுமையாக இருப்பதை கண்டு வியந்து விசாரித்தார். பின்னர் இம்மக்களின் நெசவுத்தொழில் திறமைகளை பாராட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி நெசவுத்தொழில் செய்ய அனுமதித்தார்.இம்மக்கள் வைகை கரையில் சாயத்தொழிலுக்கு உகந்ததாக இருக்கிறது என்று மன்னரிடம் தெரிவித்ததால் மன்னர் விரும்பிய இடத்தில் தங்க அனுமதிஅளித்து நெசவுத்தொழிலுக்கு வேண்டிய வசதிகளை செய்து கொடுத்ததாகக் கூறுகின்றனர்.

நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் சாதனைகள்

பரமக்குடி-எமனேஸ்வரம் பகுதியில் சுமார் 85-க்கும் மேற்பட்ட நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள நெசவாளர்களின் சாதனையாக கடந்த ஆண்டுகளில் பாரதியார், பிரதமர் மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், முதல்வர் ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் உருவம் பொறித்த கைத்தறி நூல் சேலை நெய்து சாதனை படைத்தனர். பரமக்குடியில் நெய்த கைத்தறி பட்டு சேலைக்கு தமிழக அரசு ரூ 5 லட்சம் பரிசு வழங்கியது.

பரமக்குடி-எமனேஸ்வரத்தை சேர்ந்த நெசவாளர் சரவணன் நெய்த கைத்தறி பட்டு சேலைக்கு தமிழக முதல்வரிடம் முதல் பரிசாக ரூ. 5 லட்சம் பெற்று சாதனை படைத்தார். பரமக்குடி மககள் பாரதியார் நெசவாளர் சங்கத்தின் தலை சரவணன் தயாரிப்பில் கைத்தறி சேலையின் மகாகவி பாரதியார் நெசவாளர் சங்கத்தின் தலைவர் சரவணன் தயாரிப்பில் கைத்தறி சேலையில் கும்பகோணம் ஐராவதீஸ்வரர் கோயிலில் உள்ள யானை, காளை சிற்பத்தை உருவமாக பொறித்து நெய்து உருவாக்கி உள்ளார்.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7-ம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையிலும், கைத்தறி நெசவுத் தொழிலை முன்னேற்றும் வகையிலும் தமிழக அரசால் கைத்தறி தினத்தில் கண்காட்சிகள் நடத்தி, அதில் சிறந்த நெசவாளர்களுக்கு பரிசு வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நடைபெற்ற விழாவில் பரமக்குடி எமனேஸ்வரத்தைச் சேர்ந்த நெசவாளர் சரவணன் நெய்த கைத்தறி பட்டு முதல் பரிசு பெற்றது. இந்த நெசவாளருக்கு முதல் பரிசாக ரூ. 5 லட்சமும், சான்றிதழ்களும் முதல்வரால் கைத்தறி தினத்தில் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டுகள் வரை முதல் பரிசு ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டு வந்தது.இந்த ஆண்டு முதல் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

பரமக்குடி கைத்தறி உதவி இயக்குநர் கார்த்திகேயன், கைத்தரி அலுவலர் மோகனா ஆகியோரது வழிகாட்டுதல், சிறந்த நெசவாளர் பரிசு பெற உதவியாக இருந்தது. முதல்வரிடம் பரிசு கிடைத்தது என நெசவாளர் சரவணன் தெரிவித்தார்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments