பரமக்குடி சட்டமன்ற தொகுதி பிஜேபி கட்சி நிர்வாகிகள் கூட்டம் தேவந்திர பண்பாட்டு கழக மஹாலில் நடைபெற்றது. பரமக்குடி நகர் தலைவர் ரவி தலைமை தாங்கினார்.
மாவட்ட தலைவர் தரணி முருகேசன் முன்னிலை வகித்தார். மாநில பார்வையாளர் முரளிதரன் தலைமை உரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி, மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஊடக பிரிவு மாநில செயலாளர் ஜெயகுரு, பட்டியலின மாநில செயலாளர் பிரபு, மாவட்ட பொதுச்செயலாளர்கள் மணிமாறன், ஆத்ம கார்த்திக், மாவட்ட துணை தலைவர்கள் குமார், முத்துச்சாமி எஸ்.டி அணி மாநில துணைதலைவர் சுரேஸ், மருத்துவ பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் முனியரசு, நகர்மன்ற உறுப்பினர்கள் துரை, சரவணண், பானுமதி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.