மாநில அளவிலான சிலம்பம் போட்டிக்கு பரமக்குடி கீழ முஸ்லிம் பள்ளி மாணவன் தேர்வு
ராமநாதபுரம் மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டிகள் பெருமாள்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளி நடைபெற்றது. இதில் இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து ஆயிரக்கணக்கான வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் பரமக்குடி கீழ முஸ்லிம் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவன் பி.விக்னேஷ்19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 45 கிலோ எடைப்பிரிவில் பல்வேறு வீரர்களை தோற்கடித்து முதலிடம் பெற்றார். இம்மாணவனுக்கு தங்கப் பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
பங்கு பெற்ற மாணவனுக்கு பாராட்டு
மேலும் இம்மாணவர் 2023 ஜனவரி மாதம் அரியலூரில் நடைபெறும் மாநில அளவிலான சிலம்பம் போட்டிகளில் பங்கு பெறுகின்றார். வெற்றி பெற்ற மாணவனையும் சிறப்பாக பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் இந்திரஜித், சிவகுருராஜா, அன்வர்ராஜா, நிரோஷாபானு ஆகியோரை கீழ முஸ்லிம் ஜமாத் சபை தலைவர் சாகுல்கமீது, செயலாளர் ,சாதிக்அலி, பொருளாளர் லியாக்கத்அலிகான், மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள் பள்ளியின் தாளாளர் ஜாஜஹான் தலைமை ஆசிரியர், அஜ்மல்கான், உதவித்தலைமை ஆசிரியர், புரோஸ்கான் உள்ளிட்டோர் பாராட்டினர்.