Saturday, December 2, 2023
Homeபரமக்குடிபரமக்குடி அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பரமக்குடி அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

பரமக்குடி அரசு மருத்துவமனை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் அரியனேந்தல் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், ஆய்வு மேற்கொண்டார்.

வளர்ச்சிக்கான திட்ட பணிகள் மேற்கொள்ளபடும்

ஆய்வின்போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அரியனேந்தல் ஊராட்சியில் பூங்கா நகர் பகுதியில் ரூ.9 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு இரு பக்கங்களிலும் மரங்கள் வளர்க்க அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

பின்னர் அதே பகுதியில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் உறிஞ்சு குழி அமைக்கப்பட்டுள்ளதை பார்வையிட்டு இத்தகைய திட்டம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஊராட்சிகளை பொறுத்தவரை தேவையான இடங்களில் அமைத்து மழை நீரை சேமித்திட வேண்டும். இதன் மூலம் ஆழ்துளை கிணறுகளுக்கு போதியளவு நீரூற்றை பெருக்கி கொடுக்கும் என தெரிவித்தார்.

பின்னர் பரமக்குடி நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள சௌராஷ்டிரா நகர் காலனியில் கழிவு நீர் கால்வாய் பகுதிகளை பார்வையிட்டு கால்வாய்யினை சீரமைத்து கழிவுநீர் தேங்காத வண்ணம் கண்காணித்திட வேண்டுமென நகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

குறைகளை கேட்டறிந்தார்

அதனைத் தொடர்ந்து சௌராஷ்டிரா அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று மாணவர்களின் கல்வி திறன் குறித்து ஆய்வு செய்ததுடன் பள்ளியின் உட்கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்டார்.

பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திடீர் ஆய்வு செய்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களின் வருகை குறித்து கேட்டறிந்ததுடன் சிகிச்சை பெற வந்துள்ள கர்ப்பிணி தாய்மார்களிடம் மாதாந்திர மருத்துவ பரிசோதனை மற்றும் ஸ்கேன் பரிசோதனை உரிய காலங்களில் பரிசோதிக்கப்படுகிறதா என கேட்டறிந்ததுடன் சி.டி.ஸ்கேன் மையத்திற்கு சென்று நாள்தோறும் மேற்கொள்ளும் பரிசோதனைகளின் விவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.

அறிவு சார் நூலக கட்டிடம் கட்டுவதற்கான இடத்தை  பார்வையிட்டார்

தொடர்ந்து பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் பரமக்குடி நகராட்சியின் மூலம் அறிவு சார் நிலையம் நூலக கட்டடம் கட்டுவதற்கான இடத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். பின்னர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண் வணிக வளாகம் மற்றும் மகளிர் சேவை மைய கட்டிடத்தை பார்வையிட்டதுடன் மகளிர் குழுக்களுக்கு தேவையான தொழில் பயிற்சிகளை வழங்கிட வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல், பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் , பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேது கருணாநிதி , பரமக்குடி வட்டாட்சியர் பார்த்தசாரதி அவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

The reCAPTCHA verification period has expired. Please reload the page.

- Advertisment -

Most Popular

Recent Comments