பரமக்குடியில் தீயணைப்பு துறை சார்பாக மாணவ மாணவிகளுக்கு பேரிடர் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் தீயணைப்புத்துறை சார்பில் பேரிடர் கால மீட்பு குறித்த ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விபத்தில் சிக்குவர்களை மீட்பது, மழைக்காலங்களில் பாதிக்கப்பட்டவர்களை மீட்பது உள்ளிட்டவைகள் குறித்து தத்துரூபமாக செயல்முறை விளக்கம் செய்யப்பட்டது.
ஒத்திகை நிகழ்ச்சியின் போது கேஸ் சிலிண்டரில் மளமளவென எரிந்த தீயை அப்பள்ளியில் பணிபுரியும் ஆங்கில பட்டதாரி பெண் ஆசிரியை மேரி தைரியமாக அனைத்து அனைவரையும் பாராட்டையும் பெற்றார். தீயணைப்பு அலுவலர் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஒத்திகை நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் தத்துரூபமாக விளக்கம் அளித்து விழிப்புணர்வு செய்தனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒத்திகை நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.