பரமக்குடி ஈஸ்வரன் கோவில், ஸ்ரீ விசாலாக்ஷியம் பிகா, ஸ்ரீ சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது
பரமக்குடியில் சித்திரை திருவிழா
சித்திரை மாதம் என்றாலே தமிழகத்தில் உள்ள கோவில்களில் திருவிழாக்கள் தொடங்கி திருக்கல்யாண நிகழ்ச்சி போன்று நடைபெறுவது வழக்கம்.
அதன் அடிப்படையில், ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி ஸெளராஷ்ட்ர பிராஹ்மண மஹாஜனங்களுக்குச் சொந்தமான ஸ்ரீ சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தானம் ஈஸ்வரன் கோவிலில் கடந்த 23-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று காப்பு கட்டுதலுடன், 24-ந் தேதி திங்கள்கிழமை அன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
திருவிழாவை தொடர்ந்து, சுவாமி சிம்மம், கிளி, அன்னம், குதிரை, விருஷபம், யானை, பல்லக்கு உள்பட பல வாகனங்களில் வீற்றிருந்து காலை, இரவு நகர் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இந்நிலையில், 9-ம் திருநாளான 02 – தேதி செவ்வாய் நண்பகல் ஈஸ்வரன் கோவிலில் ஸ்ரீ விசாலாக்ஷியம்பிகா-ஸ்ரீ சந்திரசேகர சுவாமி திருக்கல்யாணம் கோலாலகலமாக நடைபெற்றது.
தரிசனம் செய்த மக்கள்
திருக்கல்யாண நிகழ்வில், பரமக்குடி, சோமநாதபுரம், சத்தியமூர்த்தி காலணி, எமனேஸ்வரம், ராமநாதபுரம், மதுரை, சிதம்பரம்,கும்பகோணம். உள்பட தமிழகம் மட்டுமல்லாது வெளிநாடுகளைச் சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு வந்து சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்இரவு பட்டணப் பிரவேசம் நடைபெற்றது. 03 -தேதி புதன் காலை சுவாமிகள் தேரில் வீற்றிருந்து நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர். 05- தேதி வெள்ளி உற்சவ சாந்தியுடன் திருவிழா முடிவு பெறுகிறது.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பித்தார்
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் மானேஜிங் டிரஸ்டி துடுகுச்சி நாகநாதன், டிரஸ்டி அன்டு டிரஷரர் குச்சேரி ,பாலமுருகன், டிரஸ்டிகள் சலகவா நாகநாதன், கெட்டி கோவிந்தன், பொட்டி முரளிதரன் ஆகியோர் சிறப்பாக செய்து இருந்தனர்.
திருவிழாவையொட்டி, கோவில் கோபுரம், கோவில் வளாகம் உள்பட நகர் பகுதிகளில் பல வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நகரமே விழாக்கோலம் பூண்டு காட்சியளிக்கிறது.